விடிய விடிய இடி மழை.. வானில் வட்டமடித்து திருப்பி விடப்பட்ட விமானங்கள்.. சென்னை பயணிகள் கடும் அவதி!
சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் 8 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. சேப்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா நகர், பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

மேலும், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதிகாலையிலும் சென்னை நகரின் பல இடங்களில் லேசான மழை பெய்தது.
நள்ளிரவு முதல் தொடர்ந்து விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில், மழைநீர் தேங்கியுள்ளதால் வாக ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் மிதமான மழை பதிவானது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், அமைந்தகரை, மதுராந்தகம், மயிலாப்பூர், ஆலந்தூர், திருக்கழுகுன்றம், அயனாவரம், செங்கல்பட்டு, மாம்பலம், பொன்னேரி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் சிறிது நேரம் வட்டமடித்து பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று இரவு 11:35 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வந்தது. அந்த நேரத்தில் பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்ததால், விமானம் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
ஜெர்மனி நாட்டின் ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன், நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பெங்களூர் திரும்பிச் சென்றது.
அதேபோல் இன்று அதிகாலை 1:15 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து, 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது. மொத்தமாக 3 விமானங்கள் பெங்களூக்கு திருப்பி விடப்பட்டன.
மேலும் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் உள்ளிட்ட 8 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டம் வடித்து விட்டு தாமதமாக தரையிறங்கின. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications