கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்! பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு.. மக்களே உஷார்!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக சென்னை உட்பட வடமாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதால், ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 8,500 கன அடியிலிருந்து 10,500 கனஅடியாக அதிகரித்த நிலையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே 7,500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 10,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அம்மம்பள்ளி அணையில் இருந்து, 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு இருப்பதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. மட்டுமல்லாது ராணிப்பேட்டை மாவட்டம் கேசவரம் அணைக்கட்டில் இருந்தும் உபரி நீர் திறந்து விடப்பட்டிருப்பதாலும் பூண்டிக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் தற்போது 33 அடி அளவுக்கு நீர் இருப்பு இருக்கிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 35 அடியாகும். இந்த ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரானது கொசஸ்தலை ஆற்றில் எண்ணூருக்குச் சென்று வங்க கடலில் கலக்கிறது. எனவே ஆற்றின் கரையோரம் உள்ள 60 கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் துணி துவைக்கவோ, குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அதேபோல தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications