அதிர்ந்த பிலிப்பைன்ஸ்..சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அச்சத்தில் உறைந்த மக்கள்.. ரிக்டரில் 6.1ஆக பதிவு
வாஷிங்டன்: பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று பிலிப்பைன்ஸ். ஆயிரக்கணக்கான தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய நாடான பிலிப்பைன்சில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பிலிப்பைன்சின் விகா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். விகா நகரத்தில் இருந்து 125 கி.மீட்டர் தொலைவில் 45 கி.மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் தற்போது வரை இல்லை.
முன்னதாக நேற்று தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்திய நேரப்படி நேற்று இரவு 8.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுமத்ராவின் படங்சிடெம்புவான் நகரின் தென்மேற்கே கடலில் 84 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு ஏற்பட்டு இருந்தது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலத்திற்கு அடியே டெக்டோனிக் தட்டுகள் அடிக்கடி மோதும் "ரிங் ஆஃப் ஃபயர்" என்று அழைக்கப்படும் இடத்தில் பிலிப்பைன்ஸ் அமைந்து இருப்பதால் அந்த நாட்டில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி அறிக்கை
கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் துடிப்புடன் ஆற்றி வருவதை நான் நன்கு அறிவேன்.

நீர் மோர் பந்தல்
தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இப்பொழுதே தாங்கள் வாழும் பகுதிகளில், ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இரு வேளை கண்காணிக்க வேண்டும்
பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்படும் குடிநீர்ப் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை கழக நிர்வாகிகள், காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்." என்று கேட்டுக்கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
இதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் நீர் மோர் பந்தல் அமைக்குமாறு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதில், "மக்கள் பணி செய்வது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மக்களின் தாகத்தினை தணிக்கும் வகையில் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம்.

நீர் மோர் வழங்க கோரிக்கை
அந்த வகையில், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கிவிட்ட நிலையில், கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் ஆங்காங்கே உடனடியாக தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைத்து, பொதுமக்களின் தாகத்தினை தணித்திட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications