ஜொமாட்டோ மீது உரிமையாளர் புகார்.. சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையில் 3500 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்!
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள சேலம் ஆர் ஆர் பிரியாணி தயாரிக்கும் இடத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி ஆய்வின் மூலமாக 3500 கிலோ அளவிலான கெட்டுப்போன இறைச்சிகளை கைப்பற்றியுள்ளனர்.
Recommended Video
ஆன்லைனில் ஆர்டர் செய்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் இருந்து வாங்கப்பட்ட இறைச்சிகள் தரமற்றதாக இருந்ததை அடுத்து ஆர்.ஆர்.பிரியாணி உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
விலை கொடுத்து வாங்கப்பட்ட இறைச்சி சரியான முறையில் வழங்கப்படவில்லை என்று வந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 3500 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஆய்வு
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சதீஷ் : சேலம் ஆர்ஆர் உணவகம் அளித்த புகாரின் அடிப்படையில் இறைச்சிகள் அனைத்தையுமே கைப்பற்றி விட்டோம். கெட்டுப்போன இறைச்சி குறித்து தெரிந்து கொள்ள கால்நடை மருத்துவமனைக்கு மாதிரிகளை அனுப்பி வைக்க உள்ளோம்.

ஜொமாட்டோ
ஆர்டர் டெலிவரி செய்த ஜொமாட்டோ நிறுவனம் தான் இதற்கு பதில் கூற வேண்டும். தொடர்ந்து கர்நாடகாவில் எந்த இடத்தில் இந்த இறைச்சி வெட்டப்பட்டது, எந்த நிறுவனம் மூலம் பெறப்பட்டது என்ற முழு விசாரணையை மேற்கொள்ள உள்ளோம். ப்ரீசரில் வைத்த இறைச்சிகளே கெட்டு போயிற்று என்றால் எப்படி?

எந்த உணவகங்கள்
இந்த இறைச்சி வேறு எந்த மாதிரியான உணவகங்களுக்கு சென்றன என்பது குறித்து விசாரிப்போம். எதுவாக இருந்தாலும் ஆய்வறிக்கைக்கு பிறகே உண்மை தெரியவரும். ஆனால் சேலம் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் புகாரின் பேரில் நாங்கள் அங்கு சென்ற போது இறைச்சிகளிலிருந்து அழுகிய வாடை வீசியது என்றார்.

பிரியாணி உணவு
ஆரணியில் கெட்டு போன இறைச்சியால் செய்யப்பட்ட உணவை சாப்பிட்ட சிறுமி பலி, கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி உள்ளிட்ட செய்திகள் வெளியான நிலையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆங்காங்கே அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த சோதனையில் தவறு இருப்பது கண்டறியப்பட்டால் அந்த உணவகம் மீது நடவடிக்கையும் பாய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காசுக்கே சாப்பாடு போட்டாலும் பசியாற உணவு கொடுப்பவர்களை தெய்வமாக பார்க்கும் நிலையில் இது போன்று அதிக பேராசைக்காக மக்களின் உயிருடன் விளையாடும் போக்கை உணவகங்களும் அதற்கு இறைச்சிகளை சப்ளை செய்வோரும் கைவிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications