பிரியா மரண வழக்கு:இரு டாக்டர்கள் முன்ஜாமீன் மனு- உத்தரவு பிறப்பிக்க ஹைகோர்ட் மறுப்பு- சரணடைய அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா (ப்ரியா) மரணத்துக்கு காரணமான இரு மருத்துவர்களின் (டாக்டர்களின்) முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார், உஷாராணியின் மகள் பிரியா என்ற ப்ரியா சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி. பட்டப் படிப்பு முதல் ஆண்டு படித்து வந்தார். பிரியாவுக்கு கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சிகிச்சையின் போது பிரியாவின் கால் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பிரியா மரணமடைந்தார். பிரியாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 தவறான சிகிச்சை

தவறான சிகிச்சை

சென்னை பெரியார்நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் பிரியா கடந்த 15-ந் தேதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி இரு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

 மருத்துவர்கள் முன்ஜாமீன் மனு

மருத்துவர்கள் முன்ஜாமீன் மனு

அதில், இது போன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்த பலர் இன்று நல்ல நிலையில் உள்ளதாகவும், மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் இரு மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். மேலும் இருவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனவும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும் மனுவில் உறுதி அளித்துள்ளனர்.

 அரசு தரப்பு சொன்னது என்ன?

அரசு தரப்பு சொன்னது என்ன?

இந்த மனு இன்று நீதிபதி ஜெததீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சம்பவம் அண்மையில்தான் நடந்தது; விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி, விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், மருத்துவ நிபணர் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.அதில் மாணவி வலி பற்றி கூறிய போதும், மருத்துவர்கள் சரியாக கவனிக்கவில்லை.. மருத்துவ அதிகாரியும், முதன்மை மருத்துவ அதிகாரியும் வலிக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான கடமையில் இருந்து தவறிவிட்டனர். அவர்கள் அதை மற்ற மருத்துவர்களுக்கும் தெரிவிக்க தவறிவிட்டனர். மருத்துவரின் அலட்சியமா என்பது குறித்து விசாரணை முடிவில் தெரிய வரும் என்று தெரிவித்தார். அத்துடன் அரசு தரப்பில் விரிவான பதிலுக்கு இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சரணடையலாமே

சரணடையலாமே

மனுதாரர்கள் தரப்பில் மருத்துவர்களை துன்புறுத்த கூடாது என்று உத்தரவுகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் சரணடைய தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ,தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார். அறுவை சிகிச்சை முடிந்து பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு சென்று விட்டேன் எப்படி கூற முடியும் ? உங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது. வேண்டுமானால் சரணையடையுங்கள் என்று தெரிவித்தார்.

 விசாரணை ஒத்திவைப்பு

விசாரணை ஒத்திவைப்பு

மனுதாரர்கள் சார்பில், குடும்பத்தினரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும், சரணவடைதற்கு காவல் நிலையத்திற்கு செல்வதே ஆபத்தாக உள்ளது. நூற்றுக்கணக்கான மிரட்டல் வருகின்றன ; எங்கள் பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்தனர். உங்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும் என்று தெரிவித்த நீதிபதி, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை இரண்டு வாரம் ஒத்திவைத்துள்ளார். மேலும் குடும்பத்தினரை துன்புறுத்தக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+