அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் உருவான புரேவி புயலானது இலங்கையின் திருகோணமலை- பருத்தித் துறை இடையே முல்லைத் தீவு அருகே கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் வளசரவாக்கம், ராமபுரம், போரூர், முகப்பேர், அண்ணாநகர், செங்குன்றம், புழல் பகுதியிலும் பரவலாக மழை பெய்கிறது. அயனாவரம், அசோக் நகர், மேற்கு மாம்பலம், வண்ணாரப்பேட்டையிலும் மழை பெய்கிறது.

மீனம்பாக்கம்
அது போல் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, கோடம்பாக்கம், எம்ஆர்சி நகர் பகுதிகளிலும் வேளச்சேரி, தரமணி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. போரூர், மதுரவாயல், ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இடியுடன் கூடிய கனமழை
இந்த நிலையில் குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புயல் மழை பெய்து வருகிறது. அது போல் தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை , நாகை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது.

தண்ணீர்
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது போல் காரைக்காலில் 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

தண்ணீர்
ஏற்கெனவே நிவர் புயலால் சென்னை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் சென்னை புறநகர் பகுதிகளில் நிவரால் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு












Click it and Unblock the Notifications