தங்க நகைக்கடன்.. ஆர்பிஐ செய்த நல்ல காரியம்.. கிரெடிட் கார்டு விற்கும் வங்கிகளுக்கு ட்விஸ்ட்
சென்னை: இந்தியாவில் முதன்முறையாக, தங்க நகைகளுக்கு எதிராகப் பெறப்பட்ட தங்கக் கடன்கள், கிரெடிட் கார்டு கடன்களைவிட அதிகமாக இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவரப்படி, ₹3.06 லட்சம் கோடி அளவுக்குத் தங்கக் கடன்களை வங்கிகள் வழங்கியுள்ளன. அதே சமயம், கிரெடிட் கார்டு கடன் ₹2.89 இலட்சம் கோடியாக மட்டுமே. கடந்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பிற்கு, ஜூலையில் இருந்து தான் இப்படியான பெரிய மாற்றம் வரத்தொடங்கி உள்ளது.
மக்கள் கிரெட்டிட் கார்டு விஷயத்தில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க தொடங்கி உள்ளனர். முன்பெல்லாம் அவசர தேவை என்றால், கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கி வீட்டு செலவுகளை சமாளிப்பார்கள், சுற்றுலா செல்ல பயன்படுத்துவார்கள். மதுபானங்கள் அருந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவார்கள். அதிகப்படியான கடன்களை வாங்கி அதற்கு மினிமம் பணம் கட்டியே கிரெடிட் கார்டுகளுடன் வாழ்வார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை கடன்களில் அதிக கடன் என்றால் அது கிரெடிட் கார்டு கடன்கள் தான் இருந்து வந்தன. தங்க நகையின் பெயரில் வாங்கும் கடன்களை விடவும் அதிக கடன்கள் கிரெடிட் கார்டு கடன்களாகவே பல ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் கிரெடிட் கார்டுகள் சிக்கலானது என்ற பிரச்சாரம் மெல்ல மெல்ல மாறத்தொடங்கியது.
ஏற்கனவே கிரெடிட் கார்டு வாங்கியவர்கள் செய்த பிரச்சாரம் காரணமாக, புதிதாக கிரெடிட் கார்டு வாங்குவதை விட தங்கத்தின் பெயரில் கடன் வாங்கி கொள்ளலாம் என்றமனநிலைக்கு மாறத்தொடங்கினார்கள். அதன் விளைவாக தங்கக்கடன்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அதுமட்டுமல்ல, தங்கக்கடன் அதிகரிக்க, தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 100 சதவீதம் அளவிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறி உள்ளது காரணம். கடந்த 10 மாதங்களில் மட்டும் தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாய் ஏறி உள்ளது. ரியல் எஸ்டேட், பங்கு சந்தை என எல்லாவற்றையும் விட லாபம் அள்ளித்தரும் விஷயமாக தங்கம் இருக்கிறது. இது ஒருபுறம் எனில் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவதும் அதிகமாகி விட்டது.

இதன் காரணமாக இந்தியாவில் முதன்முறையாக, தங்க நகைகளுக்கு எதிராகப் பெறப்பட்ட தங்கக் கடன்கள், கிரெடிட் கார்டு கடன்களைவிட அதிகமாக இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவரப்படி, ₹3.06 லட்சம் கோடி அளவுக்குத் தங்கக் கடன்களை வங்கிகள் வழங்கியுள்ளன. அதே சமயம், கிரெடிட் கார்டு கடன் ₹2.89 இலட்சம் கோடியாக மட்டுமே. கடந்த ஜூலையில் இருந்து தான் இப்படியான பெரிய மாற்றம் வரத்தொடங்கி உள்ளது.
இந்தியாவில் தங்கக் கடன்கள் ஏன் அதிகரிக்கிறது
இதனை ஆராய்ந்து பார்க்கும் போது அதிக வட்டி கொண்ட கிரெடிட் கார்டு கடனைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதிக மக்கள் தங்கள் தங்கத்தை ஈடாக வைத்துப் பணம் கடன் வாங்கத் தொடங்கியுள்ளதையே காட்டுகிறது. சரி, இந்தியாவில் தங்கக் கடன்கள் ஏன் அதிகரிக்கிறது என்பது தெரியுமா? அது கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு தான் இப்படி அதிகரித்துள்ளது உங்களுக்கு தெரியுமா? அதுபற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
தங்கத்தின் விலை உயர்வு
கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை 41%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தங்கம் அதிக மதிப்புமிக்கதாக மாறுவதால், அதே நகைகளுக்கு எதிராக வங்கிகள் அதிகப் பணத்தைக் கடனாக வழங்குகின்றன. இதுதான் தங்க நகைக்கடன் அதிகரிக்க காரணமாக உள்ளது.
வங்கிகள் தங்கக் கடன்களை ஊக்குவிக்கின்றன
தங்கக் கடன் சந்தையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் முத்தூட் ஃபைனான்ஸ் போன்ற வங்கி சாரா பல்வேறு நிதி நிறுவனங்கள் (NBFCs) தங்க கடனை அதிகம் தந்து வந்தன. இதன் வளர்ச்சியை பார்த்த வங்கிகள் இப்போது தங்கக் கடனில் அதிக கவனம் செலுத்துகின்றன. முத்தூட்டின் தங்கக் கடன்கள் ஓராண்டில் 41% உயர்ந்து, மார்ச் 2025 நிலவரப்படி ₹1.03 இலட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ரிசர்வ் வங்கி கடனை எளிதாக்கியது
கடந்த ஜூன் மாதம் சிறிய தங்கக் கடன்களுக்கான கடன்-மதிப்பு விகிதத்தை (Loan-to-Value - LTV) அதிகரிக்க ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. இப்போது, ₹2.5 இலட்சம் வரையிலான கடன்களுக்கு, கடன் வாங்குபவர்கள் தங்கத்தின் மதிப்பில் 85% வரை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளத. முன்பு நகையின் மதிப்பில் 75% ஆக மட்டுமே இருந்தது. இதுவும் தங்க நகைக்கடன் அதிகரிக்க முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications