இனி நடராஜன்கள் அதிகம் கிடைப்பார்கள்.. கிரிக்கெட்டின் அடுத்த நகர்வு.. டிஎன்பிஎல் ஏலம் ஏன் முக்கியம்?
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஏலத்தின் முதல் நாள் முடிவடைந்துள்ளது.
சென்னை: எந்தவொரு விளையாட்டும் மக்களுக்கான விளையாட்டாக மாறவில்லை என்றால், அது எவ்வளவு சிறந்த விளையாட்டாக இருந்தாலும், மக்களால் நிராகரிக்கப்படும். அந்த வகையில் சாதாரண ஒரு பந்து இருந்தாலும் போதும் என்ற வகையில் கால்பந்தும், தென்னை மட்டையும், ஒரு பந்தும் போதும் என்ற வகையில் கிரிக்கெட் கோடிக்கணக்கான ரசிகர்களால் விளையாடப்பட்டு வருகிறது.
இன்றுவரை கிரிக்கெட் இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு அதன் எளிமையும், அதனை சுற்றிய வணிகமும் தான் காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும், அங்கே கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களும், கிரிக்கெட் பார்க்கும் பெரியவர்களையும் காண முடியும்.
நாளடைவில் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதை கடந்து, திறமையை வெளிப்படுத்தும் இடமாகவும், வணிகத்திற்கான இடமாகவும் மாறியுள்ளது. அதனால் தொழில்முறை கிரிக்கெட் வீரர் என்ற பதமும் உருவாகியது. அந்த தொழில்முறை கிரிக்கெட் வந்த பின் ஐபிஎல், டிஎன்பிஎல் என்று கிரிக்கெட்டின் வளர்ச்சி கற்பனைக்கும் எட்டாத வகையில் வளர்ந்து வருகிறது.

டிஎன்பிஎல் ஏலம்
அண்மையில் மகளிர் ஐபிஎல் தொடருக்கான முதல் ஏலம் நடைபெற்று முடிந்த சூழலில், தமிழ்நாடு கிரிக்கெட் பிரீமியர் லீக் தொடருக்கான முதல் ஏலத்தை நடத்திக் காட்டி இருக்கிறது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். நடராஜன், சாய் சுதர்சன், ஜெகதீசன், அபராஜித், ஷாரூக் கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் என்று ஏராளமான கிரிக்கெட் வீரர்களை டிஎன்பிஎல் உருவாக்கியுள்ளது. இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில், 7வது சீசனுக்கான கிரிக்கெட் தொடர் ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

942 கிரிக்கெட் வீரர்கள்
டிஎன்பிஎல் 2023ம் ஆண்டிற்கான ஏலம் இன்று மற்றும் நாளை மகாபலிபுரத்தில் உள்ள ஐடிசி கென்சஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து சுமார் 942 கிரிக்கெட் வீரர்கள் டிஎன்பிஎல் ஏலத்தில் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு உரிமையாளருக்கும் மொத்த ஏலத்தொகை ரூ. 70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக நடந்த ஏலம்
8 அணிகளும் அதிகபட்சம் இரண்டு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்தில் இடம் பெறுவார்கள். மொத்தம் 942 வீரர்களை கொண்டு நடத்தப்படும் இந்த ஏலத்தில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள், உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியவர்கள், டிஎன்பிஎல் அனுபவம் கொண்ட வீரர்கள், மற்ற வீரர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஏலம் வேண்டுமானால் மிக சாதாரணமாக நடந்திருக்கலாம்.

எதிர்காலம்
ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் கிராமத்தில் இருந்தும், மூலை முடுக்குகளில் இருந்தும் கிரிக்கெட் வீரர்களை தேடி பிடித்து வருகிறது. சாதாரணமாக பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரில், ஆர்சிபி அணி இன்று செய்திருக்கும் முயற்சியை, ஒருநாள் டிஎன்பிஎல் அணிகள் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும்.

நடராஜன்கள் கிடைப்பார்கள்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களும் இனி எப்படி டிஎன்பிஎல் தொடரில் விளையாடலாம் என்று தேட தொடங்கும் போது, கிரிக்கெட்டின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியமும், அவர்களுக்கு தேவையான பயிற்சியும் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கப்பெறும். அப்படி நகரும் பட்சத்தில் இன்னும் ஏராளமான நடராஜன்கள் இந்தியாவுக்கு கிடைப்பார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications