NIA ரெய்டு: ஆபாச பேச்சு- இழிவான விமர்சனங்களால் குண்டாஸ்-சீமான் ’வலது கரம்’ சாட்டை துரைமுருகன் யார்?
சென்னை: வெளிநாட்டு நிதி உதவி, தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு விவகாரங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA- என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளில் வீடுகளில் இன்று சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ. சோதனையில் சிக்கியவர்களில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலைபோல நம்பும் வலதுகரம் சாட்டை துரைமுருகனும் ஒருவர்.
சாட்டை துரைமுருகன்.. நாம் தமிழர் கட்சியின் தற்போதைய கொள்கை பரப்பு செயலாளர். சீமானால் 2 முறை நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர்.

சாட்டை துரைமுருகன் தாம் மெடிக்கல் ரெப்- ஆக பணிபுரிந்ததாக மேடைகளில் குறிப்பிடுவார். ஒவ்வொரு பொதுக் கூட்ட மேடையிலும் திமுக தலைவர்களை குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போல பேசி இழிவான சொற்களில் விமர்சிப்பவர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் தொடர்ந்தும் இழிவாக பேசியவர் சாட்டை துரைமுருகன். இதனால் சட்டை துரைமுருகன் மீது ஏராளமான வழக்குகள் பாய்ந்தன. ஒருகட்டத்தில் குண்டர் சட்டமும் சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்தது.
இந்த வழக்குகளில், நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய சாட்டை துரைமுருகன் தமது ஆண் உறுப்பில் தொற்று ஏற்பட்டுவிட்டது என்பது உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டிருந்தார். ஒருவழியாக ஜாமீனில் வெளியே வந்த போதும் சாட்டை துரைமுருகன் தொடர்ந்து அவதூறாக பேசுவதையே வாடிக்கையாக வைத்திருந்தார்.
சீமான், நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் பண பேரம் பேசிய சாட்டை துரைமுருகனின் ஆடியோவும் வெளியானது. அதேபோல நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளையும் சீமானை எதிர்ப்பவர்களையும் மிக மோசமான தரகுறைவான வார்த்தைகளால் சாட்டை துரைமுருகன் விமர்சிக்கும் ஆடியோக்களும் வெளியாகி சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
இத்தனைக்குப் பிறகும் சாட்டை துரைமுருகனை தமது வலதுகரமாகவே சீமான் வைத்திருப்பதற்கு காரணமே தற்போது என்.ஐ.ஏ. கையில் எடுத்திருக்கும் வெளிநாட்டு நிதி உதவிதான் எனவும் சொல்லப்படுகிறது. தற்போது என்.ஐ.ஏ. குறி வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சி பிரமுகர்களில் சாட்டை துரைமுருகன்தான் முக்கியமானவர். இதனால்தான் சீமானுக்கும் நெருக்கடி எனவும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications