ஏற்காடு வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ.. இரவிலும் தீயை அணைக்கும் பணி தீவிரம்!
சென்னை: சேலம் மாவட்டம் ஏற்காடு வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்து விட்டு எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சேம மாவட்டத்தில் உள்ள எழில் கொஞ்சம் வனப்பகுதி ஏற்காடு. ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம். இந்நிலையில், ஏற்காடு வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு, அது வேகமாகப் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தற்போது தினமும் பகலில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. வனப் பகுதிகளைப் பொறுத்தவரை கோடை வெயிலால் ஆங்காங்கே காட்டுத் தீ பரவிட வாய்ப்புகள் உள்ளது. இதனை தடுக்க வனத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்ட வனப்பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கடும் கோடை வெப்பத்தால் காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சருகுகள் அகற்றப்பட்டு, 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் வெட்டப்பட்டது.
எனினும், சேலம் மாவட்டம் ஏற்காடு வனப்பகுதியில் இன்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுத்து, தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications