முதல் நாளில் சஸ்பெண்ட்.. அடுத்த நாளே ரத்து! ஏடிஎஸ்பி வெள்ளத்துரை விவகாரம்.. முதல்வருக்கு நேரில் நன்றி
சென்னை: காவல்துறையில் ஏடிஎஸ்பியாக பணியாற்றிய வெள்ளத்துரை ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெள்ளத்துரை நேரில் சந்தித்து பேசி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பனை சுட்டுக் கொன்ற குழுவிலும் இடம் பெற்றிருந்தார். மேலும் சென்னை அயோத்தி குப்பத்தில் ரௌடி வீரமணி என்பவரை என்கவுண்டர் செய்ததில் பிரபலமானார்.

இதேபோன்று கொடும் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 12 ரௌடிகளை என்கவுண்டர் செய்து இருப்பதாகவும் காவல்துறையில் பேச்சு உள்ளது. இதனால் இவரை 'என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்” என காவல்துறையினர் அழைப்பர்.
வெள்ளத்துரை: இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதி காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் ரௌடிசம் செய்பவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக இருந்து வந்தார். இந்த நிலையில், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியில் இருந்து இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் வியாழக்கிழமை மாலை அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் மூலம் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி விசாரணை: கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ரௌடி ராமு என்கிற கொக்கி குமார் காவல்நிலைய மரணம் சம்பந்தமாக சிபிசிஐ போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இதில் வெள்ளத்துரைக்கும் சம்பந்தம் இருப்பதாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது.
சஸ்பெண்ட் ரத்து: இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஓய்வுபெற இருந்த ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை ஒருநாள் முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் வெள்ளத்துரை மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின்: ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பணியிடை நீக்கம் உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் அதை ரத்து செய்து உத்தரவு வெளியானது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்ட பிறகே உத்தரவு ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இந்த விவகாரத்தில் பெண் உயர் அதிகாரி ஒருவரை முதலமைச்சர் கண்டித்ததாகவும், அதன் பிறகே வெள்ளத்துரை மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
முதல்வருடன் சந்திப்பு: இதனையடுத்து முறைப்படி தனது பணியில் இருந்து வெள்ளத்துரை ஓய்வு பெற்றார். தொடர்ந்து தற்போது பணி அனுபவங்கள், என்கவுண்டர்கள், ரவுடிகள் குறித்து யூட்யூப் சேனல்களில் அவர் பேட்டி அளித்து வருகிறார். இந்நிலையில் தனது சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை நன்றி தெரிவித்துள்ளார். சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வரை சந்தித்த அவர் நினைவுப் பரிசை வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications