Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maithreyan: திமுகவில் இணைந்த 2 மாதங்களில் மைத்ரேயனுக்கு புதிய பதவி! குவியும் வாழ்த்துகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் அண்மையில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக தன்னிடம் வருவோருக்கு உரிய மரியாதையையும் பொறுப்புகளையும் கொடுக்கிறது என்பது இதிலிருந்தே தெரிகிறது.

சென்னையை சேர்ந்தவர் டாக்டர் மைத்ரேயன். இவர் புற்றுநோய் சிகிச்சை நிபுணர். 1991 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து 1999ஆம் ஆண்டு வரை அந்த கட்சியில் தொடர்ந்து பயணித்து வந்தார். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

maithreyan admk dmk

2002 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்வானார். தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. அப்போது ஓபிஎஸ் ஆதரவாளாக இருந்து வந்தார். இதையடுத்து 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங், தேசிய செயலாளர் சி.டி.ரவி, செய்தித் தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம் ஆகியோர் முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அங்கு அவர் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அவருக்கு பதவிகள் ஏதும் வழங்கப்படவில்லை.

இதையடுத்து அவர் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததும் மைத்ரேயன் விலக காரணம் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மைத்ரேயனுக்கு முன்பு திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு திமுக இலக்கிய அணித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக. அமமுவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு பல்வேறு பதவிகளை திமுக வழங்கியுள்ளது. அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர், தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது தேனி மக்களவை உறுப்பினராகவும் இருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு தினகரன் அணியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். அவ்வாறு இணைந்த அவருக்கு 50 நாட்களுக்குள் கரூர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதுடன் அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திற்கு ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த லட்சுமணனுக்கு விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதிமுகவில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இருந்த வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்ததும் இலக்கிய அணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

அதிமுகவில் இருந்த எ.வ.வேலு பின்னர் திமுகவில் இணைந்தார். தற்போது பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்து வருகிறார். அது போல் சாத்தூர் ராமசந்திரன், எஸ்.ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.கண்ணப்பன், பி.கே. சேகர்பாபு ஆகியோரும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள். இவர்கள் அனைவரும் தற்போது திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+