Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.98.25 கோடி முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடந்த 98 கோடியே 25 லட்சம் ரூபாய் முறைகேடு தொடர்பான வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக, அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

Former AIADMK Minister SP Velumani Re-Indicted in Contract Fraud Case Govt Tells Madras HC

எஸ்பி வேலுமணி தனது உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு, டெண்டர் வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, தி.மு.க தரப்பில், அக்கட்சியின் அமைப்பு செயலார் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட்டில் வேலுமணி மனு தாக்கல் செய்தார். எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஆதாரங்களை சேகரித்தால், அவருக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரலாம் என தெரிவித்திருந்தது.

இந்த பின்னணியில், ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், அவர் மீது வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு, கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி 2024 அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐஏஎஸ் அதிகாரிகளான கே எஸ் கந்தசாமி, மற்றும் கே விஜயா கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை செப்டம்பர் 12 ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+