ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. பண்ருட்டி ராமச்சந்திரன் - ஓபிஎஸ் திடீர் சந்திப்பு
சென்னை: சென்னையில் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவேரா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, தொடர்ச்சியாக இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன் பின்னர் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அதிமுக தரப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில், நேரடியாக அதிமுகவே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மறுபக்கம் தரப்பில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஜன.23ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துள்ளார். சென்னை அசோக் நகரில் நடைபெற்று வரும் சந்திப்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications