ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயலலிதா! நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்! ஆணையத்திடம் ’மாஜி’ சொன்ன ரகசியம்!
சென்னை : முன்னாள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ரத்த வெள்ளத்தில் பார்த்ததாக தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ் வாக்குமூலம் அளித்திருப்பதாக பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டு காலமாக இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் பலமுறை ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டது.
விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் தேதி ஆணையத்தின் அறிக்கையை ஆணையத்தின் விசாரணை தலைவரான ஆறுமுகசாமி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா மரணம்
ஆணைய அறிக்கையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா,முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ், சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அடுக்கடுக்காக பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

7 பேர் காரணம்
ஜெயலலிதா வெளிநாடு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படாததற்கு 7 பேர் காரணம் எனவும், ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல அப்பல்லோ மருத்துவமனை எதிராக இருந்தது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் , சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரும் ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதற்கு எதிராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம மோகன் ராவ்
இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு முன்னதாக தனக்கு தெரிந்தவை குறித்து அப்போதைய தலைமை செயலாளரான ராம மோகன் ராவ் ஆணையத்திடம் தெரிவித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது. அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி அதாவது திறந்த இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மூழ்கி இருந்ததை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக கூறியிருக்கிறார்.

அறுவை சிகிச்சை
டிசம்பர் 4ஆம் தேதி அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் மருத்துவமனைக்கு சென்றபோது ஜெயலலிதாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் மாரடைப்பு ஏற்பட்டதாக தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் ஜெ
இதை அடுத்து வார்டில் சென்று பார்த்த போது ஜெயலலிதா ரத்த வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை கண்டு தான் பெரும் அதிர்ச்சி அடைந்ததாகவும், அறுவை சிகிச்சையை ஏன் வார்டில் வைத்து செய்தீர்கள். அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் செல்லலாமே எனக் கூறிவிட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இது குறித்து தகவல் தெரிவித்ததாக கூறியிருக்கிறார். இந்த தகவலால் ஜெயலலிதா ஆதரவாளர்களும் அதிமுக தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications