நல்லதை பேசுங்க.. அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து பதிலளிக்காமல் நழுவிய ஓபிஎஸ்!
சென்னை: பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஓ பன்னீர் செல்வம் பதில் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. நேற்று முன் தினம் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் தீர்மானத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதற்கு அண்ணாமலை அண்ணா, ஜெயலலிதா குறித்து விமர்சித்தது காரணமாக அதிமுக சொன்னாலும் கூட அரசியல் வட்டாரத்தில் வேறு பல்வேறு விஷயங்களும் பேசப்படுகிறது.

குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரையும் இணைக்க வேண்டும் என்று பாஜக விரும்பியதாகவும் இதற்கு அதிமுக எதிர்ப்பு காட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அதுபோக பாஜக கேட்ட சீட்களின் எண்ணிக்கை உள்பட பல காரணங்களை அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வரும் 2024 லோக்சபா தேர்தலில் எடப்பாடி தலைமையில் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்திக்கும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இதனால், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை அதிமுக இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூட பேச்சு எழுந்தது. அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து இதுவரை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கருத்து எதுவும் கூறவில்லை. எடப்பாடியுடன் கூட்டணி முறிந்துள்ளதால் பாஜகவுக்கு வேறு ஆப்ஷன் இல்லை..இனி ஓபிஎஸ் மற்றும் டிடிவியை தங்கள் அணிக்கு பாஜக அழைத்துக்கொள்ளும் என்று பேசப்படும் நிலையில் ஓ பன்னீர் செல்வம் மவுனமாக அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை தற்போது வரை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், தான் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வத்திடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு ஒபிஎஸ் பதிலளிக்காமல் சென்றார். ஓபிஎஸ் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் சென்றது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
-
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications