உங்க கம்பெனி மேனேஜர் பணம் கேட்பார் ஏமாந்துடாதீங்க.. புதிய எஐ மோசடி குறித்து முன்னாள் டிஜிபி வார்னிங்
சென்னை: ரொம்ப அவசரமாக இருக்கேன்.. எனக்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தை அனுப்பி விடுங்கள் என்று.. நீங்க அய்யய்யோ அவரே சொல்லுறாரே என அவர் சொல்லும் பேங்க் அக்கவுண்ட் எண்ணிற்கு பணத்தை அனுப்பினால் அவ்வளவுதான்.. என எச்சரிக்கை வீடியோவை சைலேந்திர பாபு வெளியிட்டுள்ளார்.
தகவல் தொழிநுட்ப முன்னேற்றம் நமக்கு பல வழிகளிலும் உதவிகரமாக இருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மறுநொடியே அவர்களை தொடர்பு கொள்ள முடியும். அதுமட்டும் இன்றி சமூக வலைத்தளங்கள் மூலமாக முன் பின் தெரியாதவர்களிடமும் அறிமுகம் ஆக முடிகிறது. பணம் அனுப்புவது முதல் பொருட்களை வாங்குவது வரை எல்லாமே செல்போன் மூலமே செய்யும் வகையில் தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியே ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு எத்தனையோ வழிகளில் தகவல் தொழில் நுட்பம் பயனுள்ளதாக இருந்தாலும் கூட, தகவல் தொழில் நுட்ப வசதிகள் மூலமே மோசடி சம்பவங்களும் அதிகரித்துள்ளது. வங்கி கணக்கு விவரங்களை பெற்று வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவது, பரிசு விழுந்து இருப்பதாகவும் அதை பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை செலுத்துங்கள் எனக்கூறி வலையை விரிப்பது என இத்தகைய மோசடிகளின் பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்.
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க ஒருபக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்துக் கொண்டே வந்தாலும் மற்றொரு பக்கம் மோசடிகளும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீப காலமாக ஆன்லைனில் பார்ட் ஜாப் என்று மெசேஜ் அனுப்பி அதன் மூலமாக பணம் கறக்கும் ஒரு மோசடி அரங்கேறி வருகிறது. தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும் புரட்சியையே தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்படுத்தி விட்டது எனலாம்.

எத்தனையோ வழிகளில் ஏஐ தொழில் நுட்பம் மனித குலத்திற்கு உதவும் வகையில் இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் அதை வைத்தே மோசடி நபர்களும் தங்கள் சித்து வேலைகளை காட்ட தொடங்கி விட்டனர். அந்த வகையில் தான் தற்போது ஏஐ தொழில் நுட்பம் மூலமாக ஒரு நூதன மோசடி அரங்கேறி வருவதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- புதிதாக வந்து இருக்கும் சைபர் கிரைம் மோசடியில் யார் வேண்டும் என்றாலும் ஏமாந்து விடுவார்கள்.. ஏனெனில் அவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். ஒரு வீடியோ கால் வரும்... அந்த காலில் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரிந்த நபர்..உங்க உறவினர்..உங்க கம்பெனி மேனேஜர் பேசுவார்..
ரொம்ப அவசரமாக இருக்கேன்.. எனக்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தை அனுப்பி விடுங்கள் என்று.. நீங்க அய்யய்யோ அவரே சொல்லுறாரே என அவர் சொல்லும் பேங்க் அக்கவுண்ட் எண்ணிற்கு பணத்தை அனுப்பி விடுவீர்கள். திருப்பி கூப்பிடுவார்... அதில் ஒரு லட்சம் பத்தாது.. ஒரு 5 லட்சம் கொடுங்க என்பார். நீங்க அந்த ஐந்து லட்சத்தையும் கொடுத்து மொத்தம் 6 லட்சம் கொடுத்து விடுவீர்கள்..அப்புறம் போன் பண்ணி கேட்டால்..
அப்போதான் சம்பந்தப்பட்ட நபர் சொல்லுவார் நான் ஒன்னும் உங்களிடம் பணம் அனுப்ப சொல்லவில்லையே என்று.. இது என்னவென்றால் அவரை மாதிரியே ஒரு உருவம்.. இப்போ டிவியில் எல்லாம் செய்தி வாசிப்பதை கூட சினிமா நட்சத்திரங்களை வைத்து செய்தி வாசிப்பது போல கொண்டு வருகிறார்கள். அது அவுங்க(சினிமா பிரபலங்கள்) வாசிப்பது இல்லை. அது ஒரு கிராபிக்ஸ்..
கணிணியை வைத்து செய்கிறார்கள். எனவே, உங்களுக்கு யாராவது இப்படி போன் பண்ணி பணம் கேட்டால் உடனே போனை வைத்து விட்டு உங்க சொந்தக்காரர், மேனேஜருக்கு போன் பண்ணி இந்த மாதிரி பணம் கேட்டீங்களா.. இப்படி ஒரு போன் வந்தது நீங்கதானே பேசினீங்க என்று கேட்டால்.. அய்யய்யோ நான் பேசவில்லை என்பார்கள்.
அப்போதுதான் உங்களுக்கு ஏமாற்ற தான் முயற்சி நடந்தது என தெரிந்துவிடும். சைபர் குற்றங்கள் என்றாலே உங்களிடம் பணத்தை பிடுங்கத்தான் குறியாக இருப்பார்கள். எனவே யார் யாரெல்லாம் திருப்பி திருப்பி பணம் கேட்கிறார்களோ அங்க சைபர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.. இவ்வாறு சைலேந்திர பாபு கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications