பாக்யராஜ் வீட்டிற்கு அஞ்சலி செலுத்த வந்த லெஜண்ட் சரவணன்! நெகிழ வைத்த காட்சி.. சோகத்தில் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் பிரபலங்களின் வருகை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன் இன்று நேரில் பாக்யராஜ் இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

அஞ்சலி செலுத்திய லெஜண்ட் சரவணன்

கருப்பு நிற உடையில் மிகவும் சோகத்துடன் வந்த லெஜண்ட் சரவணன், முதலில் பாக்யராஜின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சில நிமிடங்கள் அமைதியாக கைகளை கூப்பி நின்று அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தார். பின்னர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மருமகள் கீர்த்தி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். குடும்பத்தினருடன் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு, மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்று தேற்றியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு ரசிகர்களை அதிகம் நெகிழ வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.

K Bhagyaraj Legend Saravanan

பாக்யராஜின் கடைசி பேச்சு

சில மாதங்களுக்கு முன்பு லெஜண்ட் சரவணன் நடித்த 'லீடர்' திரைப்படத்தின் இசை மற்றும் புரமோஷன் விழாவில் பாக்யராஜ் பேசிய வார்த்தைகள் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அப்போது மேடையில் பேசிய பாக்யராஜ், "லெஜெண்ட் சரவணன் 50 வயதுக்கு பிறகு சினிமாவில் ஹீரோவாக வருகிறார் என்று சொன்னார்கள். ஆனால் சரவணனை பார்த்தால் அந்த வயதை யாராலும் நம்ப முடியாது. இன்னும் இளைஞர் மாதிரி ஃபிட்டாக இருக்கிறார். இந்தப் படத்தின் கதையும் பலருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். சரவணன் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று மனதார பாராட்டியிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் பெருமையுடன் கேட்டுக் கொண்டிருந்த லெஜண்ட் சரவணன், சில மாதங்களிலேயே அதே பாக்யராஜின் வீட்டிற்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்த வருவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

K Bhagyaraj Legend Saravanan

லெஜெண்ட் சரவணன் பதிவு

பாக்யராஜின் மறைவு குறித்து தனது எக்ஸ் (X) தளத்திலும் லெஜண்ட் சரவணன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரும், என் மீது பேரன்பும் பாசமும் கொண்டிருந்த திரு. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவின் பல துறைகளில் தனித்துவமான முத்திரை பதித்த பாக்யராஜின் மறைவு, ஒட்டுமொத்த திரையுலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், நயன்தாரா - விக்னேஷ் சிவன், சுந்தர்.சி - குஷ்பு, சரத்குமார் - ராதிகா, த்ரிஷா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பலர் தொடர்ந்து பாக்யராஜ் இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், தற்போது லெஜண்ட் சரவணனின் வருகையும் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

"மேடையில் வாழ்த்திய மனிதருக்கு... சில மாதங்களிலேயே மலர் தூவி விடை கொடுக்க வேண்டிய நிலை!" என்ற ரசிகர்களின் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+