ஐஐடி மெட்ராஸுக்கு ரூ 110 கோடி நன்கொடை! யார் இந்த சுனில் வாத்வானி?
சென்னை: சென்னை ஐஐடியில் புதிதாக செயற்கை நுண்ணறிவு பள்ளியை தொடங்க முன்னாள் மாணவர் ஒருவர் மட்டும் ரூ 110 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான (Data Science) ஆராய்ச்சி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் மாணவர் சுனில் வாத்வானி ரூ 110 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சி பள்ளி இந்தியாவில் AI துறையில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐஐடியில் 1975 ஆம் ஆண்டு சுனில் வாத்வானி படித்து முடித்தார்.
இவர் பட்டப்படிப்பு முடித்தவுடனேயே சுகாதாரத் துறையில் முதலீடு செய்து புதிய தொழிலை தொடங்கினார். கடந்த 50 ஆண்டுகளில் வாத்வானி நிறுவனங்களை பில்லியன் டாலர் நிறுவனங்களாக வளர்த்துவிட்டார். இந்த நிலையில் சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்கவுள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சயின்ஸ் ஆராய்ச்சி பள்ளிக்கு அதிகபட்சமாக ரூ 110 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்திய ஐஐடிகளில் தனி ஒரு நபர் அதிகமாக நன்கொடை வழங்கியது இதுதான் முதல் முறை. இதுகுறித்து பேசிய சென்ன ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில் புதிதாக தொடங்கப்படும் ஆராய்ச்சி பள்ளியில் AIDA (Artificial Intelligence and Data Science) என்ற பெயரில் பட்டம் பெறலாம்.
இதை தொடங்க காரணமாக இருந்த வாத்வானியின் பெயரை கொண்ட இந்த படிப்பு தொடங்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் B.Tech மற்றும் M.Tech பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்புகளுடன் இங்கிலாந்தின் பர்ஹிம்ஹாம் பல்கலைக்கழகத்துடன் MSc படிப்பு 15 பேராசிரியர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் இதற்கு முன்பு செயற்கை நுண்ணறிவுக்கு என தனிபாடத்திட்டம் இருந்தாலும் அது பாடபிரிவாக செயல்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஆண்டிற்கு ஒரு இளநிலை படிப்பில் 30 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், வேளாண்மை, போக்குவரத்து, நிதி, பகுப்பாய்வு, உற்பத்தி, சுற்றுச்சூழல், எரிசக்தி பாதுகாப்பு கல்வி, உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவுக்கான ஆராய்ச்சி இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ மற்றும் ஐஐடி கேட் தேர்வுகள் மூலம் டேட்டா சயின்ஸ் அல்லது செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவை மாணவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
சர்வதேச நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா (பேஸ்புக்) உள்ளிட்ட நிறுவனங்களில் ஏஐ பட்டப்படிப்பு பெரும் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் காமகோடி தெரிவித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications