மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு உரிமை இல்லை.. உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.. சந்துரு கருத்து!
சட்டம் செல்லுமா, செல்லாதா என்று முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்று சந்துரு கூறியுள்ளார்.
சென்னை: ஆன்லைன் ரம்மி மசோதா விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் உள்நோக்கம் கொண்டதாக தெரிவதாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். தற்போதைய மசோதா என்ன வடிவத்தில் உள்ளதோ, அதே வடிவத்தில் தான் அவசர சட்டம் இயற்றப்பட்டது என்று கூறியுள்ள சந்துரு, ஆளுநரின் செயல்பாடு மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கையை தாமதப்படுத்தும் செயல் என்று கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
அந்த குழு அளித்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவரச சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்
இந்த நிலையில் அவசரச் சட்டத்திற்கு மாற்றாக, ஆன்லைன் சூதாட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அக்டோபர் மாதம் 19ம் தேதி தாக்கல் செய்தார். அது பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்ததால், தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம் கடந்த நவம்பர் மாதம் காலாவதியானது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
இதனிடையே தமிழ்நாடு அரசு அனுப்பிய தடைச் சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கூறிய நிலையில், உடனடியாக தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 4 மாதம் 11 நாட்களுக்கு பின், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கருத்து
இதுகுறித்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தயாரிப்பு குழு தலைவர் சந்துரு கருத்து தெரிவித்துள்ளார். அதில், மாநில அரசின் மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு உரிமை இல்லை. நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளாக உள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் விவகாரத்தில் ஆளுநர் இரட்டை நாடகம் போடுகிறார். மசோதாவை திருப்பி அனுப்பியதில் ஆளுநரின் சூதாட்டமே அதிகமாக உள்ளது.

அதிகாரம் யாருக்கு?
பாஜகவிற்கு தேர்தல் நிதி வசூலிக்கும் நாடகமா என தெரியவில்லை. ஆளுநர் இந்த கருத்தை சொல்ல 4 மாத அவகாசம் தேவையில்லை. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர்கள் ஆளும் கட்சியின் கிளை செயலாளர்கள் போல் செயல்படுறார்கள். மேலும் சட்டம் செல்லுமா, செல்லாதா என்று முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு.

உள்நோக்கம்
தற்போதைய மசோதா என்ன வடிவத்தில் உள்ளதோ அதே வடிவத்தில்தான் அவசர சட்டம் இயற்றப்பட்டது. ஆளுநரின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. ஆளுநரின் செயல்பாடு மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கையை தாமதப்படுத்தும் செயல் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications