நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாள் சிறை!
சென்னை: நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதிபதி கர்ணன். அவர் பணிக்காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார்.

ஓய்வுக்குப் பின்னரும் கர்ணன் தொடர்பான சர்ச்சை ஓயவில்லை. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை மிக மோசமாக, ஆபாசமாக விமர்சித்து நீதிபதி கர்ணன் பேசிய வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டு சர்ச்சையானது.
இதனால் கர்ணன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி கர்ணன் மீதான நடவடிக்கை குறித்து டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, கர்ணனிடம் விசாரணை நடத்தினோம்; இனி ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடமாட்டேன் என கர்ணன் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலில் அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம், ஆதாரங்கள் இருந்தும் கர்ணனை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில் சென்னை ஆவடியில் இன்று முன்னாள் நீதிபதி கர்ணனனை சென்னை மத்திய குற்றப்ப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு சுமத்திய வழக்கில் கர்ணன் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications