மிரட்டும் "ரெட் ஜெயண்ட்”.. அச்சத்தில் சிறு பட தயாரிப்பாளர்கள் ! பகீர் புகார் கிளப்பும் ஜெயக்குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆட்சி அதிகாரம் தற்போது கையில் இருப்பதால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சிறிய தயாரிப்பாளர்களிடமிருந்து குறைந்த விலைக்கு படங்களை கபளீகரம் செய்யும் போக்கு தலை தூக்க்கியுள்ளது எனவும், இதுதொடர்ந்து நீடித்தால் திரையுலகில் பூகம்பம் வெடிக்கும் நிலை உருவாகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Recommended Video

    மிரட்டும் ரெட் ஜெயண்ட்”.. அச்சத்தில் சிறு பட தயாரிப்பாளர்கள் ! பகீர் புகார் கிளப்பும் ஜெயக்குமார்!

    தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தற்போது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். இவரது தயாரிப்பு நிறுவனம் தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

    குருவி, ஆதவன் என படங்களை தயாரித்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், பல படங்களை வாங்கி விநியோகித்தும் வந்தது. அடுத்ததாக நாயகனாக நடிக்கவும் தொடங்கினார். இதுவரை 10க்கும் மேற்பட்ட நாயகனாக நடித்துள்ளார் உதயநிதி.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    இந்நிலையில் தான் ஆட்சி அதிகாரம் தற்போது கையில் இருப்பதால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சிறிய தயாரிப்பாளர்களிடமிருந்து குறைந்த விலைக்கு படங்களை கபளீகரம் செய்யும் போக்கு தலை தூக்கியுள்ளது எனவும், இதுதொடர்ந்து நீடித்தால் திரையுலகில் பூகம்பம் வெடிக்கும் நிலை உருவாகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    போலீசார் மீது புகார்

    போலீசார் மீது புகார்

    மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் காவல்துறை மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் கொடுத்துள்ளார். சென்னை பட்டினாப்பாக்கத்தில் வீட்டில் தன்னை கைது செய்த போதும், தொடர் வழக்குகள் மூலமாகவும் போலீசார் தனக்கு நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து இந்த புகாரை கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய அவர், கடந்த 35 ஆண்டுகளாக எந்த ஒரு வழக்கும் இல்லாமல் மக்கள் பாராட்டும் வகையில் வாழ்ந்து வந்தேன்.

    அரசியல் காழ்ப்புணர்ச்சி

    அரசியல் காழ்ப்புணர்ச்சி

    அதன் காரணமாகவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனக்கு பல்வேறு பதவிகளை அளித்தார். தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான குற்றச்சாட்டை வைத்து என் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இதைக்குறிப்பிட்டு என்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்

    ரெட் ஜெயன்ட் மூவிஸ் அராஜகம்

    ரெட் ஜெயன்ட் மூவிஸ் அராஜகம்

    கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்தபோது திரைப்பட தொழிலை வளரவிடாமல் செய்தது. தற்போது ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' என்ற நிறுவனத்தின் மூலம் சிறிய தயாரிப்பாளர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு படங்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கை தலைதூக்கி உள்ளது. இது தொடர்ந்து நடைபெற்றால் திரைத்துறையில் பெரிய பூகம்பமே வெடிக்கும் நிலை ஏற்படலாம்" எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+