வீட்டுக்குள் குவிந்த போலீஸ்.. ஜெயக்குமாரை டிரஸ் மாற்ற விடாததால் மனைவி ஆவேச வாக்குவாதம்.. பரபரப்பு
சென்னை : திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் உடைமாற்ற கூட போலீசார் அவகாசம் அளிக்க வில்லை என அவரது மனைவி காவல்துறையினரிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
கடந்த சனிக்கிழமை சென்னை ராயபுரத்தில் 49ஆவது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர்.
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் கள்ள ஓட்டுப் போட்டுவிட்டுத் தப்ப முயன்றதாகக் கூறி திமுக தொண்டரை பிடித்து அதிமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஜெயக்குமார் கைது
அப்போது சம்பவ இடத்தில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமாகிய ஜெயக்குமார் அதிமுகவினர் உடன் இணைந்து அவரை தாக்கியதாகவும், மேலும் திமுக பிரமுகரின் சட்டையை கழற்றி அரை நிர்வாணப்படுத்தி அடித்து சென்றதாக வீடியோ வெளியானது. கள்ள ஓட்டு போட முயன்றாலும் தனி நபர் ஒருவரை முன்னாள் அமைச்சர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு எப்படி தாக்கலாம் எனவும் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாக தெரிவித்திருந்தார்.

பல பிரிவுகளில் வழக்கு
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கலவரத்தில் ஈடுபடுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல், அவதூறாக பேசுதல், ஆயுதத்துடன் கொலை மிரட்டல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று இரவு 8 மணியளவில் பட்டினப்பாக்கம் லித் கேஸ்டில் சாலையில் வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தண்டையார்பேட்டை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

கடும் வாக்குவாதம்
இரவு உணவு முடித்து வீட்டிலிருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்ய உத்தரவு உடன் வந்திருப்பதாக போலீசார் கூறினர். அவரை உடைமாற்ற அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமாரின் மனைவி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடை மாற்ற கூட அனுமதிக்காத அளவுக்கு அவர் என்ன தவறு செய்து விட்டார் எனவும் அவர் ஆவேசமாக பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

பட்டினப்பாக்கத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்ய காவல்துறையினர் வந்திருப்பதாக தகவல் பரவியதை அடுத்து பட்டினப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்த அதிமுக தொண்டர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதையடுத்து போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அமைச்சர் ஜெயக்குமார் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி தான் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரையின் வீடும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications