அப்படியே போய்.. எடப்பாடி காலில் சட்டுன்னு விழுந்த மாஃபா பாண்டியராஜன்! கண்டுகொள்ளாத இபிஎஸ்!
சென்னை : கடந்த காலங்களில் ஓ பன்னீர் செல்வத்தின் வலதுகரம் போல் செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இன்று எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அவரது காலிலேயே விழுந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு நொடிக்கு நொடி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம். அந்த அளவுக்கு ஆலோசனை, அறிக்கைகள், பேட்டி, பரபரப்பு என சென்று கொண்டிருக்கிறது..
போகிற போக்கை பார்த்தால் ஓபிஎஸ் தரப்பில் அவர் மட்டும் தான் இருப்பார் போல என எடப்பாடி தரப்பினர் கூறுமளவுக்கு ஓபிஎஸ் பின்னே நின்ற படைத்தளபதிகள் எடப்பாடி பக்கம் தாவி வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு
என்ன நடந்தாலும் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தியே தீருவோம் என எடப்பாடி தரப்பும் எப்படியாவது பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பும் கங்கணம் கட்டிக்கொண்டு களப்பணியாற்றி வரும் நிலையில், சற்றே கலக்கத்தில் உள்ளது ஓபிஎஸ் தரப்பு காரணம் வலது கரங்கள் போல செயல்பட்டு வந்த தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் நிர்வாகிகள் தாவல்
கடந்த ஆண்டுகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயாலளர் கணேஷ் ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுகச் செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் எடப்பாடியை சந்தித்து அவருக்கு தங்களுக்கு முழு ஆதரவினை தெரிவித்தனர்.

மாஃபா பாண்டியராஜன்
எடப்பாடி பழனிச்சாமியே எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது. ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும் தர்மயுத்தம் நடத்தியபோது பக்கபலமாக செயல்பட்டவருமான முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று எடப்பாடி பழனிச்சாமி அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார்.

இபிஎஸ் காலில் விழுந்தார்
வீட்டினுள் பூங்கொத்து கொடுத்து அவருக்கு தனது ஆதரவை வழங்கிய பாண்டியராஜன் திடீரென எடப்பாடி பழனிச்சாமியின் காலில் விழுந்தார் ஆனால் இதனை கவனிக்காத எடப்பாடி பழனிச்சாமி பின்னர் சந்திக்கலாம் எனக் கூறினார். அதிமுகவில் மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் காலில் விழாத அமைச்சர்களையும் மூத்த நிர்வாகிகளையும் பார்க்க முடியாது தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிமுகவில் காலில் விழும் கலாச்சாரம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications