தோப்புவுக்கு கிரீன் சிக்னல்! கிடைக்கப்போகும் ஜாக்பாட்! நாளை ஸ்டாலினை சந்தித்து திமுகவில் ஐக்கியம்
சென்னை : முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அதிமுகவின் நிர்வாகிகள் 300 பேருடன் நாளை காலை 10.30 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.
கொங்கு மண்டலத்தில் திமுக அதிரடியான அரசியலில் இறங்கி உள்ளது. தோப்பு வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். வருவாய்த்துறை அமைச்சர், சுற்றுச்சூழல்துறை அமைச்சர், ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் எனப் பல பதவிகளில் வகித்தவர் .

அமைச்சராகவில்லை
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தின் ஒரே அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்து பவர்ஃபுல்லாக வலம்வந்தவருக்கு 2016-ல் ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில் அ.தி.மு.க., ஜெயித்த போதும். தோப்பு வெங்கடாசலத்துக்கு எந்த அமைச்சர் பொறுப்பும் வழங்கப்படவில்லை.

தீவிர முயற்சி
இது போதாது என்று அவர் வசமிருந்த ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால் வேதனை அடைந்த தோப்பு வெங்கடாச்சலம் அமைச்சர் பதவி மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிவிட வேண்டும் என தீவிரமாக அப்போது முயற்சித்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

பெருந்துறையில் போட்டி
இந்நிலையில் சட்டசபை தேர்தலிலும் அவருக்கு சீட் தரப்படவில்லை. வேதனையின் உச்சத்திற்கு சென்ற அவர், சுயேட்சையாகவே பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் 4வது இடத்தையே அவரால் பிடிக்க முடிந்தது. இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்தி வரும் திமுகவில் மாற்று கட்சியினர் தங்களை இணைத்துக்கொண்டுவருகின்றனர்.

தோப்பு வெங்கடாச்சலம்
நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய டாக்டர் மகேந்திரன், பத்மபிரியா உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளாராம்.

நாளை இணைகிறார்
அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 300 பேருடன் நாளை காலை 10.30 மணிக்கு அவர் திமுகவில் இணைய உள்ளார் எனக் கூறப்படுகிறது. ஈரோடு மாவட்ட திமுகவில் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு வெயிட்டான பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லிக்கொள்கிறார்கள்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications