டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்!
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸில் பெரிய அளவிலான மாற்றங்கள் நடைபெறலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரில், தேர்தல் செலவுக்கு 'டெல்லி' கொடுத்த பணத்தை சில தலைவர்கள் அமுக்கியதாக கூறியுள்ளார். இந்நிலையில், இதே புகார் காங்கிரஸிலும் இருக்கும் நிலையில், அதன் தலைவர் செல்வப் பெருந்தகையும் மாற்றப்படலாம் என்கின்றனர்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகியே இருந்து வந்தார். மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு அவருக்கு தேசிய அளவிலோ அல்லது மத்திய அரசிலோ எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை.

இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில் அண்மையில் டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக பாஜகவில் நிலவும் பிரச்சினைகள், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து அறிக்கையை அவர் வழங்கியுள்ளார்.
அண்ணாமலை
மேலும், கட்சிக்குள் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் மற்றும் ஆதங்கங்களையும் அவர் நேரடியாக அமித் ஷாவிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அண்ணாமலையை கட்சிக்குள் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாக தேசிய அளவிலான முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற பேச்சுகளும் அரசியல் அரங்கில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன.
நயினார் நாகேந்திரன்
இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாதது குறித்து தேசிய தலைமை தீவிர ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் செலவுகள், கட்சி நிர்வாகம் மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பாக சில புகார்கள் தேசிய தலைமையின் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும், அதுதொடர்பாக விளக்கம் கேட்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக பாஜக தலைமைப் பொறுப்பில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
காங்கிரஸ்
இதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் அதிரடி மாற்றங்களுக்கு டெல்லி மேலிடம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் தலைமை மாற்றம் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகள் குறித்து கட்சிக்குள் சில அதிருப்திகள் நிலவுவதாக கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகை
சட்டப்பேரவைத் தேர்தலின் போது வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதி ஒதுக்கீட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக உண்மையான கட்சி நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும், செல்வாக்கு மற்றும் பண பலம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரம் கட்சிக்குள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வெளியிட்ட அறிக்கையும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைமை மாற்றம்
அதில் வேட்பாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக அவர் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து காங்கிரஸ் மேலிடம் தனியாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றம் நிகழ்ந்தால், கட்சிக்குள் மோதல் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சில மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும், தனிக் கட்சி ஆரம்பிப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications