தூய்மையான அரசியல் செய்வது பாஜக மட்டுமே.. ஜெயலலிதாவுக்கு பிடித்த தலைவர் மோடி: கட்சி தாவிய ‘மாஜி’ பரபர
சென்னை: ஜெயலலிதாவுக்கு பிடித்த ஒரு அரசியல் தலைவர் உண்டு என்றால் அது பாரதப் பிரதமர் மோடி தான், பாஜக மட்டும் தான் நாட்டில் அரசியலை செய்து கொண்டிருக்கிறது என அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியின்போது சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக இருந்தவர் ராஜலட்சுமி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ராஜலட்சுமிக்கு கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வழங்கி இருந்தார்.

இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, விகே சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் ராஜலட்சுமி. அவருக்கு பாஜகவின் உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி, "பிரதமர் நரேந்திர மோடி, அண்ணாமலை தலைமையை ஏற்று பாஜகவில் இணைந்திருக்கிறேன். அதிமுகவில் இருந்து என்னை யாரும் ஓரங்கட்டவில்லை. அதிமுகவில் பல முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவும், திமுகவின் ஒரு நீட்டிக்கப்பட்ட வெர்ஷன் ஆக மாறிக் கொண்டிருக்கிறது.
பொதுவாழ்வில் தூய்மையைக் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் அதிமுகவில் தொடர முடியவில்லை. பாஜக மட்டும் தான் நாட்டில் தூய்மையான அரசியலை செய்து கொண்டிருக்கிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு என்றுமே மிகுந்த அன்பு உண்டு.

ஏனென்றால் ஜெயலலிதா, பிரதமர் மோடி குஜராத் முதல்வராக பதவியேற்றபோது, அவரது பதவியேற்பு நிகழ்வுக்குச் சென்றவர். ஜெயலலிதா அப்படி சுலபமாக எங்கும் சென்றுவிட மாட்டார். அவரே, மோடி மீது தனி மரியாதை வைத்திருந்தார். ஜெயலலிதாவுக்கு பிடித்த ஒரு அரசியல் தலைவர் உண்டு என்றால் அது பாரதப் பிரதமர் மோடி தான். அதுவே தான் என்னுடைய ஏற்பும்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பாதையும் பயணமும் மாறிவிட்டது. என்னைப் போன்ற நேர்மையாளர்களுக்கு அதிமுகவில் சுமுகமான சூழல் இல்லை. அதிமுக தான் எனக்கு எம்.எல்.ஏ பதவியை கொடுத்து அழகு பார்த்தது. ஆனால், இப்போது அதிமுக இருக்கும் சூழல் சரியானதாக இல்லை.
நான் அதிமுகவில் இருந்தபோதே, பாரதப் பிரதமர் மோடியின் பரம ரசிகை என பலமுறை சொல்லி இருக்கிறேன். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஆரோக்கியமான செயல்பாடுகள் காரணமாக அவரது தலைமையை ஏற்று இங்கு வந்திருக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் 15 பேர் டெல்லியில் பாஜக தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமாகினர். லோக்சப தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அடுத்தடுத்து அதிமுக முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்து வருவது அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications