அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி
சென்னை: முன்னாள் எம்எல்ஏ சோளிங்கர் பார்த்திபன், அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருடன் மேலும் சிலரும் திமுகவில் இணைந்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சோளிங்கர் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் பார்த்திபன். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

பின்னர் தினகரன் அமமுகவை தொடங்கியதும் அந்த கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பெரியகுளம் (தனி)- கதிர்காமு
மன்னார்குடி- காமராஜ்
திருவையாறு- கார்த்திகேயன்
காரைக்குடி- தேர்போகி பாண்டி
திருப்பத்தூர்- ஞானசேகரன்
நாங்குநேரி- இசக்கிமுத்து
ஒட்டப்பிடாரம் (தனி)- சுந்தர்ராஜன்
திருச்சி மேற்கு- செந்தில்நாதன்
சைதாப்பேட்டை- செந்தமிழன்
பூந்தமல்லி- ஏழுமலை
மடத்துக்குளம் - சி.சண்முகவேல்
ஆகிய 11 தொகுதிகளாகும். இந்த வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் கடந்த சில தினங்களாக அமமுகவில் பலர் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அமமுகவுக்கு செல்வாக்கு இருக்கும் தொகுதிகளை விட்டுவிட்டு வேறு தொகுதிகளை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் பலருக்கு சீட் கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ சோளிங்கர் பார்த்திபன், அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். அவருடன்
அமமுக அவைத் தலைவர் கோபால், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் கோ.தண்டபாணியும் திமுகவில் இணைந்தனர். இதனால் அமமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் அமமுகவின் முகமாக இருந்த துணை பொதுச் செயலாளர் S.V.S.P.மாணிக்கராஜாவை தினகரன் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அவர் திமுகவில் இணைந்தார். இதற்கு காரணமாக என்டிஏ கூட்டணியில் தினகரன் இணைந்தாலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெறவில்லை என்ற ஆதங்கத்தால் மாணிக்கராஜா அதிருப்தியில் இருந்ததாகவும் அவரே திமுகவில் இணையவிருந்ததை அறிந்த தினகரன், தானே அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக முந்திக் கொண்டு அறிவித்துவிட்டார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications