நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் அண்மையில் விலகினர். இவர்களில் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி திமுகவில் இணைந்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இன்று (27.1.2021), மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இராமநாதபுரம் மாவட்டம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி - மாநில மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சு.அமர்நாத் - வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் வழக்கறிஞர் மு.இரமேஷ் - திருவாடானை தொகுதி பொருளாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் தி.மு.க.வில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்.

அதுபோது கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைமைக் கழக சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், வெளிநாடுவாழ் இந்தியர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார், எம்.பி., சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் வழக்கறிஞர் அ.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு திமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications