I am a happy Sanatani.. 'சண்டைக்கு' வந்த 'சனாதனி' மாஜி நியூஸ் ரீடர் ஷோபனா ரவி!
சென்னை: சனாதனம் தொடர்பாக விவாதங்களில் இணைந்துள்ள முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி தம்மை ஒரு 'சனாதனி' என பிரகடனம் செய்வதில் மகிழ்ச்சி என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஷோபனா ரவியின் ட்விட்டர் பதிவு: சனாதன தர்மம் என்பதற்கு எப்போதுமே அழியாமல் இருக்கும் தர்மம் என்று பொருள். ஜாதிகளுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாடு அரசு இப்போதே ஜாதிகளை ஒழித்துவிடலாம். இன்று முதல் ஜாதி கிடையாது என்று சொல்லட்டுமே. ஜாதி, அரசியல் அவசியம். சத்தியம் தர்மம் இவை இரண்டும் ஆதி அந்தமற்றவை.

யார் வேண்டுமானாலும் சனாதனி ஆகலாம் ஒருவர் வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் அவர் சனாதனி.
"சாதிகள் இல்லையடி பாப்பா... குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்," எனப்பாடிய பாரதி ஒரு சனாதனி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் ஒரு சனாதனி. உண்மை என்னவென்று உள்ளே போய்ப் பார்ப்பவர் சனாதனர். சுருக்கமாகச் சொன்னால் தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நேர்மைக்குத் தன்னை ஒப்புவித்தவர் எல்லாரும் சனாதனர்.
பிறப்பால் நான் ஒரு ஹிந்து. ஓர்ந்து ஓர்ந்து என்னை நானே தெளிவு படுத்திக் கொண்ட விதத்தால் நான் ஒரு சனாதனி. இயற்கை தர்மம் சனாதனம். இறைவனே இந்த பூமிக்கு இறங்கி வந்தாலும் அவனும் இந்த தர்மத்துக்குத் தலை வணங்கித் தான் ஆகவேண்டும். சமூகச் சீர்கேடுகளுக்கும் சனாதனத்துக்கும் சம்பந்தமில்லை.
சனாதன தர்மம் என்பதற்கு எப்போதுமே அழியாமல் இருக்கும் தர்மம் என்று பொருள். ஜாதிகளுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாடு அரசு இப்போதே ஜாதிகளை ஒழித்துவிடலாம். இன்று முதல் ஜாதி கிடையாது என்று சொல்லட்டுமே. ஜாதி, அரசியல் அவசியம். சத்தியம் தர்மம் இவை இரண்டும் ஆதி அந்தமற்றவை.
— Shobana Ravi, Author. (@ShobanaRaviNews) September 4, 2023
யார்… pic.twitter.com/0GbiTw8w6C
சத்திய தர்மத்தைக் கடைபிடித்து அதனால் இறைவனை உணரத் தலைப்படுவோர் எல்லாரும் சனாதனர். சத்திய தர்மத்தைக் கடைபிடிக்கிறேன் ஆனால் இறைவனை உணரவில்லை என்று சொல்வோரும் சனாதனர் தாம். மொழிகளில் இல்லை சனாதனம். ஜாதியில் இல்லை சனாதனம். பிரிவினையில் இல்லை சனாதனம். தனக்குத் தானே உண்மையாக இருப்பவரெல்லாரும் சனாதனர்.
எனக்கும் இரண்டு கை, இரண்டு கால்கள். உங்களுக்கும் அப்படித்தான். எங்கோ இருக்கும் ஆஃப்ரிக்கருக்கும் அமெரிக்க ரு க்கும் கூட அப்படித்தான். இயற்கை தர்மத்தில் பாகுபாடு இல்லை. புயல் வந்தால் ஜாதி பார்த்து அடிப்பதில்லை. சத்தியமும் தர்மமும் கூட அப்படித்தான். எல்லாருக்கும் பொதுவானவை. எல்லாரும் பிறவிப்பயனை அடைவதற்கான இரு கண்கள் போன்றவை.

அரசியல்வாதிகளைப் போல் எழுத்திலும் பேச்சிலும் ஒன்று , குறிக்கோள் என்னவோ பணமும் பதவியும் என்றிருப்போரால் சத்திய தர்மமே பொய்யென்று ஆகிவிடுமா என்ன? சாதியை விட்டு, ஏற்றத் தாழ்வை விட்டு, வெறுப்பை விட்டு மனதளவில் வெளியே வந்தால் எல்லாரையும் உள்ளடக்கிய பரிபூரணமான சனாதன தர்மம் தரிசனம் தரும்.
சத்திய தர்மத்தை யார் பின்பற்றினாலும் தாங்கள் சனாதனியென்பது அவர்களுக்குத் தெரியும். அப்படிப்பட்டோருக்கு எல்லாருமே நம் உறவு என்ற இனிமையான மனநிலை கிட்டும். அந்த இனிமைக்கு ஈடேதும் இவ்வுலகில் இல்லை. இவ்வாறு ஷோபனா ரவி பதிவிட்டுள்ளார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications