பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு
சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காவல்துறை முன்னாள் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.-யான கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கூடுதல் டிஜிபி, ஏற்கனவே இதேபோல வேறொரு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்றும், தொடர்ந்து இதேபோன்ற குற்றச்சாட்டில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் குற்றம்சாட்டப்பட்டவரை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி மீதான புகாரை மாநில காவல்துறையான சிபிசிஐடி விசாரித்தால், அவர் மீது மென்மையான அணுகுமுறையையே கையாள்வார்கள் என்றும், வழக்கை வாபஸ் பெறும்படி, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்து, அவரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குவார்கள் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சிபிசிஐடி விசாரணை தொடங்கிய நிலையிலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தொடர்ந்து சிபிசிஐடி விசாரித்தால் முறையாக இருக்காது எனக் கூறியுள்ள மனுதாரர், பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications