டோனிக்கு நெருக்கம்.. சேவாக்கிற்கு செய்த துரோகம்! சிஎஸ்கே வீரரின் பரிதாப நிலை! இப்போது டிரைவராம்
சென்னை: 2011 உலககோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பெற்று பைனலில் விளையாடியவரும், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக டோனியுடன் களமிறங்கி அசத்திய வீரர் தற்போது பரிதாப நிலையில் உள்ளார். இந்த வீரர் இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக்கிற்கு துரோகம் செய்து விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்த நிலையில் தற்போது பஸ் டிரைவராக உள்ளார். அவர் யார்?.
கிரிக்கெட்.. இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக உள்ளது. பட்டி தொட்டி எங்கும் கிரிக்கெட்டின் புகழ் பரவி உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கிரிக்கெட்டை ரசித்து வருகின்றனர்.
இவ்வாறு கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு பொற்காலம் என்பது சுமார் 18 வயது முதல் 35 வயது அதிகபட்சமாக 40 வயது வரை மட்டுமே.

இதுவும் சில முக்கிய வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால் சில வீரர்களுக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் ஜொலிக்காமல் இருந்தால் ரெட்கார்டு கொடுத்து ஓரம்கட்டி விடுவார்கள். இதனால் ஒவ்வொரு வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடுவது மட்டுமின்றி பிற விளம்பரங்களில் நடித்து எதிர்காலத்துக்கா பணம் சம்பாதிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மேலும் சில கிரிக்கெட் வீரர்களுக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது மாநில அரசு சார்பில் பணிகளும் வழங்கப்படும். இந்த பணியை அவர்கள் தங்களின் ஓய்வு காலத்தில் மேற்கொண்டு வருமானம் ஈட்டிக்கொள்ள முடியும். இதுவும் கூட சிலருக்கு எட்டாக்கனியாக தான் உள்ளது. அந்த வகையில் தான் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் தேசிய அணிக்காக விளையாடிய வீரர்கள் தற்போது கஷ்டப்பட்டு வருகின்றனர்.
அப்படியான ஒரு நபராக இருப்பவர் தான் சுராஜ் ரந்தீப். இலங்கை அணியை சேர்ந்த இவர் சுழற்பந்து வீச்சாளர் ஆவர். இந்திய அணிய உலககோப்பை வென்ற 2011 ம் ஆண்டில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார். மேலும் உலககோப்பை பைனலில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பந்தும் வீசினார். மேலும் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனியுடன் 2 சீசன் விளையாடிானர். 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணியில் இவர் அங்கம் வகித்தார்.
அதன்பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுராஜ் ரந்தீப் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதில் அவருக்கு போதிய அளவு வருமானம் இல்லை. கடந்த 2020ல் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியாவை ஆஸ்திரேலியா எதிர்கொண்டது. அப்போது ஸ்பீன்னர்களை சமாளிக்கும் வகையில் சுராஜ் ரந்தீப்பை அந்த அணி நெட் பவுலராக பயன்படுத்தியது. அதன்பிறகு சுராஜ் ரந்தீப் பஸ் டிரைவராகவும் பணியாற்றி வருகிறார்.
சுராஜ் ரந்தீப் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பஸ் டிரைவராக உள்ளார். இவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த டிரேன்ஸ்தேவ் எனும் பஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இலங்கையில் சிந்தக ஜெயசிங்கா மற்றும் ஜிம்பாப்வேயின் வாடிங்டன் மவேங்கா ஆகியோரும் இந்த நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகின்றனர்.

தற்போது பஸ் டிரைவராக இருக்கும் சுராஜ் ரந்தீப் கிரிக்கெட்டில் இந்தியாவின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக்கிற்கு துரோகம் ஒன்றை செய்திருந்தார். இது அந்த சமயத்தில் பெரிய அளவில் சர்சையாகி இருந்தது. அதாவது 2010ல் இந்தியா-இலங்கை இடையேயான போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்படும். அப்போது சேவாக் 99 ரன்னில் களத்தில் இருப்பார்.
அவருக்கும் சதமடிக்க ஒரு ரன் தேவை என்ற நிலையில் சுராஜ் ரந்தீப் பந்து வீசுவார். அந்த பந்தை சேவாக் சிக்சருக்கு விரட்டுவார். இதையடுத்து இந்தியாவின் வெற்றி மற்றும் தனது சதத்தை சேவாக் உற்சாகமாக கொண்டாடுவார். இந்த வேளையில் தான் சுராஜ் ரந்தீப் அந்த பந்தை நோபாலாக வீசி இருப்பார். இதன்மூலம் சேவாக்கின் சதம் காணாமல் போய் இருக்கும். கிரிக்கெட்டை ஜென்டில்மேன் கேம் என அழைத்து வரும் சூழலில் சுராஜ் ரந்தீப்பின் இந்த செயல் அப்போது கடும் கண்டனத்துக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications