நோயாளிகளின் காதை கிழித்த ஒலிபெருக்கிகள்! ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் சர்ச்சை! உதயநிதி அதிரடி
சென்னை: சென்னையில் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த பந்தயத்தையொட்டி ஓமந்தூரார் மருத்துவமனை நோயாளிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் வைக்கப்பட்டு இருந்த ஒலிப்பெருக்கிகளுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவில் அகற்றப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்குள் சத்தம் கேட்காத வகையில் சவுண்ட் புரூப்பிங் அமைக்கப்பட்டு வருகிறது.
தெற்காசியா மற்றும் இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நாளை தொடங்கி நாளை மறுநாள் வரை 2 நாட்கள் நைடெபற உள்ளது. இந்த போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்த உள்ளது.

சென்னையில் இந்த போட்டியை நடத்த எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் கார் பந்தயத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் பல்வேறு தடைகளை தாண்டி நாளை சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த போட்டி சென்னையில் நடைபெற முக்கிய காரணம் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான். இந்நிலையில் தான் அவரை திரைத்துறையை சேர்ந்தவர்கள், கூட்டணி கட்சியினர் பாராட்டி வருகின்றனர்.
இந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் என்பது சென்னை தீவுத் திடலில் தொடங்கி பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்திடல் வரை நடக்கும். கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என மூன்று கிலோமீட்டர் தீவு திடலை சுற்றியுள்ள இடங்களை இணைத்து 3.5 கிலோமீட்டர் சர்க்யூட்டில் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் பந்தயத்துக்காக ஒலிபெருக்கிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. கார் பந்தயம் நடக்கும் வழித்தடங்களில் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே செல்லும் கார் பந்தயத்துக்கான வழித்தடத்திலும் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு இருந்தன.
இதில் இருந்து வந்த சத்தத்தால் நோயாளிகள் சிரமத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் கார் வழித்தடம் மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனை இருக்கும் இடத்தை காட்டும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரவ தொடங்கியது. இது விவாதத்தை கிளப்பிய நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவால் அந்த மருத்துவமனை அருகே செல்லும் வழித்தடத்தில் வைக்கப்பட்டு இருந்த ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி உயர்நீதிமன்றஉத்தரவின்படி மருத்துவமனைக்கள் வெளிப்புற சத்தம் எதுவும் வராத வகையில் Sound Proofing அமைக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications