சிவகங்கை அரசு மருத்துவமனையில் மது பாட்டிலுடன் கொண்டாட்டம்.. மருத்துவர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்
சென்னை: சிவகங்கை மாவட்டம் செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது பாட்டில், நொறுக்குத் தீனிகளுடன் புத்தாண்டு கொண்டாடியதாக வீடியோ ஒன்று வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய 4 மருத்துவர்கள், 1 மருந்தாளர் என 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையம் 2 கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு ஒரு கட்டிடத்திலும், புற நோயாளிகள் உள்ளிட்ட மற்ற சிகிச்சைகளுக்கான பிரிவு மற்றொரு கட்டிடத்திலும் இயங்கி வருகிறது.

இந்நிலையில், புத்தாண்டுக்கு முதல் நாள் இரவில் கல்லல் பகுதியை சேர்ந்த ஒருவர் விபத்தில் காயம் அடைந்தார். அவரை ஒரு வாலிபர் சிகிச்சைக்காக செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பிரசவ வார்டு மற்றும் அறுவை சிகிச்சை அறை உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு அறை கதவை தட்ட முயன்றபோது அது திறந்தது. உள்ளே யாரும் இல்லை.
மருத்துவர் இல்லை என்று அங்கு இருந்தவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. சந்தேகம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சைப்பகுதியில் உள்ள ஒரு அறைக்கு சென்று பார்த்த போது மருத்துவர் அறையில் இருந்த கட்டில் மீது உயர் ரக மதுபான பாட்டில், சிக்கன் துண்டுகள், நொறுக்குத் தீனிகள் இருந்துள்ளன.
இதையடுத்து பணியில் இருந்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் அவரோ தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்து தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
இதுகுறித்து தீவிர விசாரணை நடந்தப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய 4 மருத்துவர்கள், 1 மருந்தாளர் என 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிச.31 ஆம் தேதி மதுபாட்டில், நொறுக்குத்தீனிகள் இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications