அலறவிட்ட சிறார்கள்! திருத்தணி ரூட் ரயில்களில் பயணித்து.. ஒன்இந்தியா செய்த ரியாலிட்டி செக்!
சென்னை: திருத்தணி செல்லும் ரயிலில் வைத்து வடமாநில தொழிலாளியை சிறார்கள் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், திருத்தணி ரூட் ரயில்களில் பயணித்து, பாதுகாப்பு எப்படி இருக்கிறது? என்பதை ஒன்இந்தியா ரியாலிட்டி செக் செய்திருந்தது.
சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி பயணம் செய்த, மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சுராஜ் என்பவரை, திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ஏறிய கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், அரிவாளால் மிரட்டி, பின்னர் திருத்தணி ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டியுள்ளனர். படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த இளைஞரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் சென்னையில் புறநகர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லையோ? என்கிற கேள்வியை எழுப்பியிருந்தது. இதனையடுத்து களத்தில் இறங்கியது ஒன்இந்தியா டீம்.
ரயிலில் பயணிகளிடம் விவரங்களை கேட்ட போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. "எங்களை உரசுவது, சைகையில் அழைப்பது, பயணிகள் குறைவாக இருந்தால் நெருங்கி வந்து அச்சுறுத்துவது போன்ற பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற உணர்வே மேலோங்கியிருக்கிறது" என பெண் பயணிகளில் சிலர் கூறியுள்ளனர்.
ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆட்டோ ஸ்டான்ட்களில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில், "பார்க்க படித்தவர்களை போல இருக்கிறார்கள். சவாரி ஏற்றிய பின்னர், ஆட்டோவில் அவர்கள் அமர்ந்து பேசும் வார்த்தைகள் அச்சமூட்டுகின்றன. வெட்டு, கொலை என பேசுகிறார்கள்.
ரயிலில் அத்துமீறும் நபரை நோக்கி நாம் கேள்வி எழுப்பினால், ஆங்காங்கே அருகில் உள்ள அவர்களின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து நம்மை டார்கெட் செய்கிறார்கள். பெற்றோர்கள்தான் சரியாக வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications