ராஜீவ் கொலையாளிகள்: முருகன் உள்ளிட்ட 4 பேரும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி
சென்னை: ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன் உள்ளிட்ட 4 ஈழத் தமிழரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர்; அவர்கள் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் முதலில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி உள்ளிட்ட 6 தமிழரும் நீண்டகாலம் சிறை தண்டனை அனுபவித்ததால் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையில் இருந்து தற்போது 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். இவர்களில் முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயாஸ் ஆகியோர் ஈழத் தமிழர்கள். ஆகையால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 4 ஈழத் தமிழரையும் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கை. இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், முருகன் உள்ளிட்ட 4 ஈழத் தமிழரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர். 4 பேரும் விரும்பும் நாடு ஒன்றுக்கு செல்லலாம். இவர்கள் 4 பேரும் பாஸ்போர்ட் பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications