'எல்லாரும் இருந்து சாப்பிட்டு போங்க'.. விஜய்யின் மகாபலிபுரம் நிகழ்ச்சியில் கவனிக்க வைத்த 4 விஷயங்கள்
சென்னை: நடிகர் விஜய் இன்று மகாபலிபுரத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பைபளில் வரும் ஒரு கதையை பற்றி கூறினார். அந்த கதையில் கிணற்றில் தள்ளிவிடப்பட்டவர் நாட்டை ஆண்டது பற்றியதாக இருந்தது. அதேபோல் அனைத்து சமூக மக்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த இரண்டுமே நடிகர் விஜய் சொல்ல வருவதற்கு திமுகவை பற்றியது தான். இது யாருக்கு பொருந்தும் என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும் என்று வெளிப்படையாகவே கூறினார். இறுதியாக எல்லாரும் இருந்து சாப்பிட்டு செல்லுங்கள் என்று கூறியதுடன், கிறிஸ்துமஸ் கேக் வெட்டி குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டார்.
தமிழக வெற்றிக்கழகம் கட்சி தலைவரான நடிகர் விஜய் இன்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தினார். தவெக சார்பில் நடந்த விழாவில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், சிடி நிர்மல்குமார், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் உள்பட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல் சென்னையில் உள்ள முக்கியமான கிறிஸ்தவ பேராயர்கள் இன்று விழாவிற்கு வருகை தந்தனர்.

புரட்சி தளபதி
கிறிஸ்தவ பேராயர்கள் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை கூறி பேசும் போது, நடிகர் விஜய்யை வெகுவாக புகழ்ந்தனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், அனைவருமே செங்கோட்டையன் கொடுத்த பட்டமான புரட்சி தளபதி என்ற அடைமொழியுடன் விஜய்யை அழைத்தனர். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு விஜய்யை பலருக்கும் பிடிக்கும் என்று அதிமுக தொண்டர்களை குறி வைத்து பேராயர்கள் பேசியது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஒளி பிறக்கும்
அதேபோல் தவெக தலைவர் விஜய் அரசியலை தாண்டி சில விஷயங்களையும் இன்று பேசினார். அப்படி பேசுகையில், " கண்டிப்பாக ஒரு ஒளி ஒன்று பிறக்கும். அந்த ஒளி நம்மை வழி நடத்தும். இங்கு வந்துள்ள அருளாளர்கள்.. அன்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.. அனைத்து புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே.. பிரைஸ் த லாட்.. நம்பிக்கையோடு இருங்க... நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம் .. என் நெஞ்சில் குடியிருக்கும்.. உங்கள் அனைவருக்கும், தோழர்கள், தோழிகள், மேடையில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. எல்லாரும் இருந்து சாப்பிட்டு போங்க.. நன்றி" என்று விஜய் கூறினார்.
கேக் ஊட்டிவிட்டார்
தொடர்ந்து மிகப்பெரிய கேக் ஒன்று மேடையில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அந்த கேக்கை பல குழந்தைகளை மேடைக்கு அழைத்த விஜய், அவர்களுக்கு ஊட்டிவிட்டார். அவர்களுடன் புகைப்படமும் வீடியோவும் எடுத்து மகிழ்ந்தார். குழந்தைகள் விஜய் கேக் ஊட்டிவிட்டதுடன் வெகுவாக மகிழ்ச்சி அடைந்தன.
எளிமையாக நடந்தது
இறுதியாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் தரமான விருந்து பரிமாறப்பட்டது. இந்த விழா எந்த ஆடம்பரமும் இன்றி, மிக குறைந்த நபர்களுடன் எளிமையாக நடந்து முடிந்தது. வழக்கமாக விஜய் வரும் போது இருக்கும் சிக்கல்களைபார்க்க முடியவில்லை.. யாரும் விஜய்யை பின்தொடர்ந்து இந்த முறை நச்சரிக்கவில்லை...

-
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன தவெக.. சில நிமிடங்களில் வெளியான கரூர் ட்ரோன் காட்சி.. வசமாக மாட்டிய விஜய் -
மீண்டும் சொதப்பிய விஜய்! கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தா.. பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்! -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு! -
பெரம்பூரில் விஜய்க்கு எதிராக விஐபி வேட்பாளர்.. திமுக பெரிய பிளான்.. லிஸ்டிலேயே இல்லையே! -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே -
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications