சென்னை அருகே பிரம்மாண்டம்.. ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் சூப்பர் முடிவு.. 20,000 பேருக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் பிரம்மாண்டமான பாக்ஸ்கான் ஆலையில் தற்போது சுமார் 40 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள். இங்கு தான் , ஆப்பிள் ஐபோன் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதற்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் ரூ.1,792 கோடியில் பாக்ஸ்கான் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாம். இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

சென்னையை அடுத்து உள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏராளமான சிப்காட் வளாகங்கள் செயல்படுகின்றன. இங்கு ஐடி நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள், கனரக உதிரி பாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கணிணிகள், செல்போன், வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் என பல ஆயிரம் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் பல லட்சம் மக்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

chennai foxconn sriperumbudur

இந்தியாவிலேயே சென்னை தான் ஆட்டோ மொபைல், செல்போன் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னையை அடுத்து உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் சிப்காட் வளாகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. அந்த வகையில் இங்கு ரூ.2,601 கோடி முதலீட்டில் 3.55 லட்சம் சதுர அடி பரப்பளவில் பாக்ஸ்கான் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தான் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஐபோன் தான் இந்தியா முழுவதும் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பாக்ஸ்கான் ஆலையில், சுமார் 40 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது, பிரீமியம் வகை செல்போன்களை தயாரிக்க பாக்ஸ்கான் ஆலை நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி, கூடுதலாக ரூ.1,792 கோடியை முதலீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதாவது, 3.55 லட்சம் சதுர அடியாக உள்ள ஆலையின் கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக உயர்த்த பாக்ஸ்கான் ஆலை நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் கூடுதலாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது, ஆலையை விரிவாக்கம் செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள். அனுமதி கிடைத்ததும் ஆலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில் ஒரு சில ஆண்டுகளில் செல்போன் உற்பத்தியும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+