பல்லாயிரம் கோடி.. நைஸாக ஃபாக்ஸ்கானை தூக்கிய ஸ்டாலின்.. தமிழ்நாட்டிற்கு வருதே! குவியும் வேலைவாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பல்வேறு மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளதாம்.
முக்கியமாக இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.

அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது. ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் பாக்ஸ்கான் நிறுவனம் இ மின்சார வாகனங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவில் அந்த நிறுவனம் தொழிற்சாலையை தொடங்க உள்ளது.
இது தொடர்பாக தீவிர ஆலோசனைகளை அந்த நிறுவனம் செய்து வரும் நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடாகவுடன் போட்டி போட்டு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் தொழிற்சாலையை தொடங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு தொழிற்துறை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விரைவில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் நேற்று ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்நெட் நிறுவனம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கர்நாடகாவில் முதலீடு செய்வதற்காக அங்கே ஆலோசனைகளை மேற்கொண்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதன்பின் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்த ஆலோசனைகளின் முடிவில் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பல்வேறு மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளதாம்.
அதன்படி 1700 கோடி ரூபாய்க்கு முதல் கட்டமாக முதலீட்டிய செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் பல்வேறு கட்டமாக முதலீடுகளை செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். பெரும்பாலும் மின்னணு சாதனங்களின் உற்பத்தியை தமிழ்நாட்டில் முழுமையாக மேற்கொள்ள ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளதாம். சென்னை, கோவையில் இதற்கான தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சாதனை: சென்னையில் தற்போது சர்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறது. அதிலும் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் வேகமாக தமிழகத்தில் முதலீடுகளை பெருக்கி வருகிறது.
சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழ்நாட்டில் உற்பத்தியை செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சென்னையில் இனி அனைத்து ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் கிளை, ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர் வகையை உற்பத்தி செய்தது. ஆனால் மொத்தமாக உற்பத்தி செய்யவில்லை. 80% உற்பத்தி சென்னையில் நடந்தது. அதனால் இதை முழுமையாக மேட் இன் இந்தியா என்று சொல்ல முடியாது. இந்த நிலையில்தான் மொத்தமாக முழுக்க முழுக்க சென்னையிலேயே ஐபோனை தயாரிக்க ஆப்பிள் நிறுவனமும் பாக்ஸ்கான் நிறுவனமும் முடிவு செய்துள்ளது.
இதற்கான இறுதிக்கட்ட பணிகளும் நடந்து வருகின்றன. இது போக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மற்றும் 12 மாடலை மொத்தமாக சென்னையில் உற்பத்தி செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் உற்பத்தி செய்யப்படுவதால் இந்த போனில் இனி மேட் இன் இந்தியா என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அடுத்த மூன்று வருடங்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் இங்கேயே உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
இந்த நிலையில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்தான் தற்போது தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும் பொருள் ஆகும். ஹூண்டாய் உள்ளிட்ட ஆட்டோமொபைல் ஏற்றுமதியை முந்தி ஐபோன் ஏற்றுமதியில் சென்னை கலக்கி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் இருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications