கம்ப்யூட்டர் வேலை..கை நிறைய ஊதியம்! ஐடி இளைஞர்களை அடிமைகள் ஆக்கும் ஃபாரின் வேலை மோசடி கும்பல்..உஷார்
சென்னை: தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணி இருப்பதாக இளைஞர்களை அழைத்துச் சென்று இணைய அடிமைகள் ஆக்கி, மோசடி செயல்களில் ஈடுபட வைப்பதாகவும், இது போன்ற அழைப்புகள் வரும் போது இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தமிழக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். அதுபோல படிக்காத இளைஞர்கள் வளைகுடா நாடுகளிலும் பல நாடுகளிலும் கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞர்களை குறி வைத்து மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது.
வெளிநாடுகளில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை இருப்பதாக கூறி அவர்களை வெளிநாடுகளுக்கு வரவழைத்து 'இணைய அடிமைகள்' ஆக்கி மோசடி செயல்களில் ஈடுபட வைக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில் பலரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் வேலை என வரும்போது அவர்களை அடையாளங்களை சரி பார்ப்பதோடு, காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"சமீப காலங்களில், இந்தியாவில் இருந்து 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள், கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு நாடுகளுக்கு இலாபகரமான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் ஆன்லைன் விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவோ வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
இந்த இளைஞர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் அல்லது அதுபோன்ற பதவிகள் போன்ற முறையான வேலை வாய்ப்புகளை சாக்காக வைத்து பணியமர்த்தப்படுகிறார்கள். இருப்பினும், அங்கு சென்றவுடன் அவர்கள் இணைய அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டு, போலியான சமூக ஊடக சுயவிவரங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றுதல். FedEx மோசடிகள் மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத நபர்களை ஏமாற்றுவதற்கான மோசடித் திட்டங்களில் ஈடுபடுதல் போன்ற சட்டவிரோத இணைய நடவடிக்கைகளில் பங்கேற்க வைக்கப்படுகிறார்கள்.
சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்களின் செயல்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை Tamil Nadu Police உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் இந்த இணைய அடிமைத்தனம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள சேலம் மாவட்டம், தம்மம்பட்டி PS கு.எண். 139/2024 u/s 420, 368,371, 120 (b) IPC. (இதில் இரண்டு சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் கைது செய்யப்பட்டனர்). சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப் பிரிவு - II, கு.எண். 77/2024 u/s 419, 420, 468, 471 & 120(b) IPC மற்றும் இந்திய தண்டனை சட்டம் 1885 இன் பிரிவு 4 & 20. (இதில் ஒன்பது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்). ஆகிய வழக்குகள் இந்த முறைகேடுகள் குறித்த முழுமையான விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை பின்வரும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
(i) புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலரை (Protector of Emigrants) அணுகுவதன் மூலம் வேலையின் தன்மை மற்றும் முகவரின் சுயவிவரத்தை முழுமையாக சரிபார்க்கவும்.
(ii) வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்ப, பதிவு செய்யப்பட்ட முகவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
(iii) ஒருவர் வேலைவாய்ப்பு அல்லது பணி விசாவில் மட்டுமே பணி நிமித்தமாக பயணம் செய்ய வேண்டும். சுற்றுலா விசாவை சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
(iv) தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பு குறித்து பிராந்திய செய்தித்தாள்களில்
ஏதேனும் விளம்பரங்கள் வந்தால், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க உள்ளூர் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications