சொல்லாததை செய்த முதல்வர்...6 மாதத்தில் இத்தனை கோடி பெண்களுக்கு பயனா? முதல் கையெழுத்து செய்த மாயம்
முதல்வர் பதவி ஏற்றவுடன் சொல்லாததை செய்யும் வகையில் கோப்புகளில் கையெழுத்திட்டு 5 உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் முக்கியமானது பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம், அது படிப்படியாக திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் உடன் செல்வோர் என மாற்றப்பட்டது. இதனால் 6 மாதத்தில் பெண்கள் மட்டுமே கோடிக்கணக்கில் பயனடைந்துள்ளனர். இதுகுறித்த புள்ளி விவரங்களை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

முதல் கையெழுத்தினால் பெண்கள் பயன்
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்தாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதன்மையானது பெண்களுக்கு இலவச பேருந்து பயணம். இதனால் தமிழகம் முழுவதும் 6 மாதங்களில் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர்.

மாத வருமானத்தில் டிக்கெட் செலவு மிச்சம்
சாதாரண விளிம்பு நிலை மக்கள் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் பணிக்காக பல மைல் தூரம் பேருந்தில் பயணம் செய்யும் நிலை. இதனால் தினசரி பேருந்துக்காக மட்டுமே வருமானத்தில் பெரும் பகுதியை செலவழிக்கும் நிலை ஏற்பட்டது. அரசின் இந்த முடிவால் மாதம் 1000 முதல் 2000 ரூபாய் வரை பெண்கள் சேமிக்க முடிந்தது. இதனால் இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.

பெண்கள் மட்டுமல்ல திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்
பெண்கள், பள்ளி மாணவ மாணவியர், முதியோர்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ள நிலையில் கூடுதலாக கோரிக்கை வைத்த திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உதவியாளர்களுக்கும் இலவச பேருந்து பயண அறிவிப்பு வெளியானது. அரசின் கையில் இருக்கும் துறையால் எளிய மக்கள் பயனடைவார்கள் என்பதற்கு அரசு பேருந்துக்கழகம் சிறந்த உதாரணமாக திகழ்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

43.2 கோடி பெண்கள் 6 மாதத்தில் பயனடைந்தனர்
அரசுப்பெருந்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகம் முழுவதும் 43 கோடியே 20 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.
தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் தமிழகத்தில் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் , மாற்றுதிறனாளிகள், மாற்றுதிறனாளிகளுக்கு துணையாக வருபவர்கள், திருநங்கைகள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.
அதன்படி அன்றிலிருந்து தமிழகம் முழுவதும் அரசு நகர பேருந்துகளிலும், மாநகரங்களில் வெள்ளை நிற பலகை பொறுத்திய பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். அதன்படி இந்த திட்டம் அறிமுகபடுத்திய நாளில் இருந்து இதுவரை 43 கோடியே 20 லட்சம் பெண்கள் தமிழகம் முழுவதும் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்து பயன்யடைந்துள்ளனர்.

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளும் பயணம்
இதே காலக்கட்டத்தில் சுமார் 30 லட்சம் மாற்றுதிறனாளிகளும், அவர்களுடன் துணையாக வந்த 1 லட்சத்து 75 ஆயிரம் பேரும் இலவசமாக பயணம் செய்துள்ளனர். அதே போல் 2 லட்சத்து 57 ஆயிரம் திருநங்கைகள் இலவசமாக இந்த திட்டத்தின் கீழ் பயணம் செய்து பயன் அடைந்துள்ளனர்.

ஒரு நாளைக்கு சராசரி 60% பெண்கள் இலவச பயணம்
சராசரியாக ஒரு நாள் ஒன்றுக்கு 34 லட்சம் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலையில், அதில் 60 சதவீத பெண்கள் இலவசமாக பயணம் செய்து இந்த திட்டத்தின் கீழ் பயன்யடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
93% முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட போக்குவரத்து கழக தொழிலாளர்கள்
இது தவிர பேருந்து போக்குவரத்துக்கழக தொழிலாலர்கள் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தையும் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. இதில் 45 வயதுக்கு மேற்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் (94%) 64677 பேர். இரண்டாம் தவணையும் சேர்த்து போட்டுள்ளோர் (46.83%) 33761 பேர்.
18 வயதுக்கு மேல் 45 வயதுக்குட்பட்டோரில் முதல்தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் (92.89%) 46024, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் (42.5%) 21056 பேர். இவ்வாறு போக்குவரத்துக் கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60
முதல்வர் பதவி ஏற்றவுடன் சொல்லாததை செய்யும் வகையில் கோப்புகளில் கையெழுத்திட்டு 5 உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் முக்கியமானது பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம், அது படிப்படியாக திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் உடன் செல்வோர் என மாற்றப்பட்டது. இதனால் 6 மாதத்தில் பெண்கள் மட்டுமே கோடிக்கணக்கில் பயனடைந்துள்ளனர். இதுகுறித்த புள்ளி விவரங்களை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications