சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் இலவச பஸ் பாஸ் விநியோகம்
சென்னையில் முதியவர்களுக்கு இன்று முதல் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 பணிமனைகள், 19 பேருந்து நிலையங்களில் இலவச பஸ் பாஸ் பெறலாம்.
சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் இன்று முதல் இலவசமாக பயணம் செய்வதற்காக பஸ் பாஸ் பெறுவதற்கான டோக்கன்களை முதியவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
Recommended Video

தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 12% முதியோர் உள்ளனர். மக்களின் சராசரி வாழ்நாள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வாழ்நாள் வயது சராசரியாக 68 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சர்க்கரை நோய், மூட்டு வலி போன்றவற்றுக்கு தொடர் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனர் ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில், மூத்த குடி மக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இலவச பஸ் பாஸ் திட்டம் மூத்த குடிமக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக முதியோர்களுக்கான இலவச பஸ் பாஸ் சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை மாநகரப் பேருந்துகளில் இன்று முதல் இலவசமாக பயணம் செய்வதற்காக பஸ் பாஸ் பெறுவதற்கான டோக்கன்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
21 பணிமனைகள், 19 பேருந்து நிலையங்களில் இலவச பேருந்து பயண அட்டைகளை முதியவர்கள் பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் ஒன்றுக்கு பத்து வீதம், ஆறு மாதங்களுக்கு டோக்கன் வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள் மற்றும் புதியதாக பெற விரும்புபவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கொரோனா காரணமாக கடந்த 11 மாதங்களாக முடங்கிப் போயிருந்த மூத்த குடிமக்கள் அரசின் அறிவிப்பினால் நிம்மதியடைந்துள்ளனர்.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications