அடி தூள்..நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவசம்..அரசு போக்குவரத்துக்கழகம் அசத்தல் அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நாட்டுப்புற கலைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அனைத்து தொழில்களும் முடங்கி, மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் சூழல் நிலவியது.
கிராமியக் கலைகள், தெருக்கூத்து உள்ளிட்ட தொழில்கள் நலிவடைந்தன. நாட்டுப்புற கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை பேருந்துகளில் கொண்டு செல்ல கட்டணம் வசூலிப்பது அவர்களுக்கு பெரிய சுமையாக இருந்தது. இதை இப்போது, தளர்த்திவிட்டது தமிழக அரசு.

அரசு போக்குவரத்துக்கழகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் டிரைவர், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடக கலைஞர்களுக்கு மட்டும் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் 50 சதவீத பயண கட்டண சலுகையுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

நாட்டுப்புற கலைஞர்கள்
அதை ஏற்று, கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள், அரசு பேருந்தில் தொழில் முறையாக பயணம் செய்யும் போது, 50 சதவீத பயணக் கட்டண சலுகை பெறலாம்.

கருவிகளுக்கு இலவசம்
அவர்கள் எடுத்து வரும் இசைக் கருவிகள், தொழில் கருவிகளை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தப்பாட்டம், மாடு, மயில், காவடி, கரக ஆட்டங்கள், பொய்க்கால் குதிரை, கொல்லி கட்டை, நையாண்டி மேளம், நாதஸ்வரம், பம்பை, உருமி, உடுக்கை, ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், தவில் மற்றும் சிறிய அளவிலான கருவிகளையும் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

இலவச கட்டண சலுகை
அவர்களின் சலுகை கட்டண பயணம், எடுத்துச் செல்லும் கருவிகளின் விபரங்களை வழிப்பட்டியலுடன் இணைத்து அலுவலகத்தில் கண்டக்டர்கள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச பயணத்தை, மதுரை, கும்பகோணம், கோவை, சென்னை, விழுப்புரம், சேலம் கோட்ட பேருந்துகளிலும் அனுமதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நாட்டுப்புற கலைஞர்கள் மகிழ்ச்சி
இந்த அறிவிப்பு, நாட்டுப்புற கலைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நாடகக் கலைஞர்கள் இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்திய கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டுப்புற கலைஞர்கள் தங்களின் பொருட்களை இலவசமாக எடுத்துச்செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications