Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gen Z கிட்ஸை வளைக்க சூப்பர் ப்ளான்.. பிப்ரவரியில் மாணவர்கள் கையில் லேப்டாப்! ரெடியான தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பிப்ரவரி மாதத்திற்குள் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒரு உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதற்கட்டமாக அரசு கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு முதலில் லேப்டாப் வழங்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு ஏற்கனவே சுமார் 10 லட்சம் லேப்டாப்களை டெல் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. இதற்காக சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Free Laptop Tamil Nadu College Students

இலவச லேப்டாப்

நவம்பர் மாத இறுதிக்குள் லேப்டாப் விநியோக பணிகள் மாவட்ட வாரியாக தொடங்க உள்ளன. முதலில் அரசு கல்லூரிகளுக்கு, பின்னர் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனத் தகவல். இந்த விநியோகத்தின் மூலம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன் பிப்ரவரி மாதத்திற்குள் மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம். தமிழகத்தில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு திட்டம்

பிளஸ் டூ முடித்த பிறகு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கும் இந்தத் திட்டம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு 2020-21, 2021-22, 2022-23 கல்வியாண்டுகளில் லேப்டாப் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து, திமுக அரசு தேர்தல் அறிக்கையில் லேப்டாப் பதிலாக டேப்லெட் வழங்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி "டேப்லெட் உடைந்து விடும் வாய்ப்பு அதிகம் என்பதால், லேப்டாப் வழங்கும் திட்டம் தொடரும்" என அறிவித்திருந்தார்.

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இப்போது அரசு மீண்டும் திட்டத்தை புதுப்பித்து இந்த கல்வியாண்டிலேயே மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் பணிகளை தொடங்குகிறது. 2026 தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு அரசின் முக்கிய பரிசாக இந்த லேப்டாப் திட்டம் அமைய இருக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் தங்கள் லேப்டாப் கனவு நிறைவேறும் தருணத்தை ஆர்வர்த்துடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்தத் திட்டத்தின் பின்னணியில் 2026 சட்டமன்ற தேர்தல் கணக்குகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

2026 தேர்தல்

கிட்டதட்ட மூன்றாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர்கள் வாக்குரிமையை பெற்றிருப்பார்கள். அவர்களது வாக்குகளை கவரும் விதமாகவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் முதலாம் ஆண்டும், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அடுத்த ஆண்டுகளில் லேப்டாப்பை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மூன்றாவது ஆண்டு மாணவர்கள் மார்ச் வாக்கில் கல்லூரியை விட்டு சென்று விடுவார்கள் என்பதால் அவர்களுக்கு உடனடியாக லேப்டாப் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மகளிர் உரிமை தொகை திட்டம் போல இந்தத் திட்டமும் தேர்தலில் எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+