சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி தொடக்கம் - இணையத்தில் பதிவு செய்யலாம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்றும் மாணவர்கள் பதிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

Google Oneindia Tamil News

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதுவரை பதிவு செய்யாத மாணவர்கள் இன்றும் பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக இணையவழி நீட் பயிற்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், விருப்பம் உள்ள மாணவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இணைய வழியில் நடக்கும் இலவச நீட் பயிற்சி வகுப்பில் பிளஸ் 1 பதிவு எண்ணை பதிவிட்டு கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Free NEET training for government school students - register from online

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துவரும் சூழலில், இன்று முதல் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன. 2020ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்த கோவையைச் சேர்ந்த தனியார் அமைப்பு 2021ஆம் ஆண்டிற்கும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

நீட் தேர்வில் தாலியை அகற்றும் விவகாரம்: தேசிய தேர்வு முகமை பதில் தர ஹைகோர்ட் உத்தரவு நீட் தேர்வில் தாலியை அகற்றும் விவகாரம்: தேசிய தேர்வு முகமை பதில் தர ஹைகோர்ட் உத்தரவு

நீட் பயிற்சி வகுப்பில் 4 மணி நேரம் வகுப்பு மற்றும் 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 நீட் தேர்வு நடைபெறும் முந்தைய வாரம் வரை மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

Free NEET training for government school students - register from online

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் நீட் பயிற்சி வகுப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Free NEET training classes for government and government-aided school students begin today. More than 15,000 people have applied to join the free NEET training centers run on behalf of the Tamil Nadu government. The Department of School Education has announced that you can register for the free NEET training class plus 1 by registering your Plus 1 registration number.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X