இலவச மின்சாரம் சர்ப்ரைஸ் விவசாயிகளுக்கு.. கரண்ட் வேகத்தில் காரியத்தை முடித்த ஸ்டாலின்.. செம திமுக
சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டமானது, பல வருட காலமாகவே செயல்பாட்டில் உள்ள முக்கிய கொள்கையாகும். 1989-90ல் மறைந்த முதல்வர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், இப்போது ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் "ஒரு லட்சம் மின் இணைப்புத் திட்டம்" என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.. இதுகுறித்த செய்தி ஒன்றுதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..
திமுக அரசு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது பல வாக்குறுதிகளை தந்திருந்தது.. அதில் மின் இணைப்புக்காக நீண்டகாலமாகக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக அறிவித்திருந்தது.. அதற்கான பணிகளையும் துரிதமாக மேற்கொண்டது..

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்
இதனிடையே, அரசின் இந்த வேகமான செயல்பாட்டிற்குப் பின்னால் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.. . குறிப்பாக, ஒரு லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், பல இடங்களில் டிரான்ஸ்பார்மர்களின் பற்றாக்குறையால் மின் விநியோகம் சீராக இல்லை என்பது முக்கிய குற்றச்சாட்டாக கூறப்பட்டது..
அதுமட்டுமல்ல, தரமற்ற மின் சாதனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், மின் கம்பங்கள் நடுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. "பெயரளவில் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளனவே தவிர, பல விவசாயிகளுக்கு இன்னும் முழுமையான மின்சாரம் கிடைக்கவில்லை" என்பதும், மின் வாரியத்தின் கடன் சுமை அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய இலவசத் திட்டங்கள் வாரியத்தின் நிதிநிலையைப் பாதிக்கும் என்பதும் இவர்களின் வாதமாக உள்ளது.
ஒரு லட்சம் மின் இணைப்பு திட்டம்
இந்நிலையில், "ஒரு லட்சம் மின் இணைப்புத் திட்டம்" என்ற இந்த திட்டம் தமிழக வேளாண் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது..
அதாவது பதவியேற்ற 6 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது.. அந்தவகையில், பதவியேற்ற 6 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது.. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மொத்தம் 2.19 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, சுமார் 3.38 லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாகப் பாசன வசதி பெற்றுள்ளதாகவும், விவசாய மின்சார மானியத்திற்காக ஒதுக்கப்படும் தொகை 2024-25ல் 6,962 கோடி ரூபாயிலிருந்து, 2025-26 பட்ஜெட்டில் 8,186 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த புள்ளி விவரங்களில் மேலும் தெரியவந்துள்ளது..
திமுகவினர் மகிழ்ச்சி - பெருமிதம்
இதனிடையே, அதிலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த மின் இணைப்புத் திட்டத்தை ஒரு மிகப்பெரிய சாதனையாக திமுகவினர் மக்களிடம் கொண்டு செல்ல துவங்கி உள்ளனர்..
"பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட விண்ணப்பங்களுக்கு நாங்கள் வந்தவுடன் உயிர் கொடுத்தோம்" என்பதைத் தங்களின் முதன்மைப் பிரச்சாரமாக முன்வைக்கிறார்கள்..
குறிப்பாக, தட்கல் மற்றும் சாதாரண வரிசையில் விண்ணப்பித்த சுமார் 4.52 லட்சம் பேரில் பெரும்பாலானோருக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதை சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டுகின்றனர். "சொன்னதைச் செய்தோம்" என்ற முழக்கத்தின் கீழ், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திய அரசாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் திமுக, உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிப்பதற்குக் கூடுதல் மின் இணைப்புகளே காரணம் என்று கூறி அரசை பாராட்டி தள்ளி கொண்டிருக்கிறார்களாம்..!!
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications