ராமேஸ்வரம் டூ காசிக்கு இலவச ஆன்மீக பயணம்.. விண்ணப்பிப்பது எப்படி?.. முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் உள்ள மூத்த குடிமக்களை ராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அழைத்துச் செல்லப்படவுள்ளது. தமிழக அளவில் 600 பக்தர்களை ராமேஸ்வரத்தில் இருந்து ரயில் மூலமாக காசிக்கு இலவசமாக அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த ஆன்மீக பயணத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மூத்த குடிமக்கள் ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் வகையில், இலவசமாக ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளது. இந்தப் பயணத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 2025- -2026 ஆம் ஆண்டிற்கு ராமேஸ்வரத்தில் இருந்து ரயிலில் 10 நாட்கள் ஆன்மிக சுற்றுப்பயணமாக காசிக்கு அழைத்து செல்ல உள்ளனர். தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த இலவச ஆன்மீக பயணத்துக்கு தமிழகம் முழுவதும் மொத்தமாக 600 பேர் தேர்வு செய்யப்பட்டு பயண செலவுகள் எதவும் பறாமல் அழைத்துச் செல்லப்படவுள்ளது. இந்த பயணத்துக்கு எப்படி விண்ணபிக்கலாம், தகுதிகள் என்ன, எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து, இந்துசமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: 2025-2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பின்படி, இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி, அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 30 பக்தர்கள் வீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 600 பக்தர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்களை தமது முகவரி அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இந்து சமய அநிலையத்துறை இணைய தளத்திலிருந்து www.hrce.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.
காசி ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள் விவரம்:
1. காசி ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
2.விண்ணப்பதாரர்கள் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது சான்று இணைக்கப்பட வேண்டும்.
3. விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் 2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். வட்டாட்சியரிடமிருந்து வருமானச்சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும்
4. காசி ஆன்மிகப் பயணம் (10 நாட்கள்) சென்று வரும் அளவிற்கு விண்ணப்பதாரர்களுக்கு போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவர்களின் (Civil Surgeon) சான்று இணைக்கப்பட வேண்டும்.
5. விண்ணப்பதாரர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரம் இணைக்க வேண்டும்.
6. ஆதார் கார்டு அல்லது நிரந்தரக் கணக்கு எண் (PAN Card) நகல் இணைக்கப்பட வேண்டும்.
7. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப்படுவர்.
8. ஆன்மிக பயணத்திற்கான விண்ணப்பங்களை தமது இருப்பிடம் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இந்து சமய அநிலையத்துறை இணைய தளத்திலிருந்து www.hrce.tn.gov.n பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
9. விண்ணப்பதாரர்கள் தமது வசிப்பிடம் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். வேறு மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
10. இந்து சமய அறநிலையத்துறையின் ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திற்கும், தலா 30 விண்ணப்பதாரர்கள் வீதம், 20 இணை ஆணையர் மண்டலத்திலிருந்து 600 விண்ணப்பதாரர்கள் மட்டும் மண்டல இணை ஆணையரின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்படுவர். மண்டல இணை ஆணையரின் முடிவே இறுதியானது.
11. வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் 600-க்கு மேல் இருப்பின் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் 600 விண்ணப்பதார்களையும், ஒரே பயணமாக அல்லாமல் 10 பயணங்களாக பிரித்து அழைத்துச் செல்ல நேரிடும் போதும், ஒவ்வொரு பயணத்திற்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர்.
12.விண்ணப்பதாரரின் கணவரோ / மனைவியோ (spouse) விண்ணப்பித்திருந்தால், அதன் விபரத்தினை தமது விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
13.பத்து நாட்கள் பயணத்திற்கு, பக்தர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தங்களுடன் எடுத்துவர வேண்டும்.
14.ஆன்மிகப் பயணத்தின்போது மிக விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்க்கவும்.
15.ஆன்மிக பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பயண நாளுக்கு முதல் நாளே தமது சொந்தப் பொறுப்பில் இராமேசுவரம் வந்து திருக்கோயில் அலுவலகத்தில் தமது வருகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறே இராமேசுவரத்தில் ஆன்மிக பயணம் நிறைவு செய்தவுடன் தமது சொந்த செலவில் அவரவர் இருப்பிடம் திரும்ப வேண்டும்.
16.இராமேசுவரத்தில் துவங்கும் இந்த ஆன்மிகப் பயணம் காசி தரிசனம் முடித்து மீண்டும் இராமேசுவரம் வந்து அருள்மிகு இராமநாதசுவாமியை வழிபட்ட பின்னரே நிறைவு பெறும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அக்டோபர் 22 ஆம் தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத் துறை என்ற முகவரிக்கு அனுப்பிக்க வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications