ரேசன் கடையில் அரிசி, கோதுமை மட்டுமில்லை.. தினை கூட கிடைக்கும்.. குஷியான அறிவிப்பு
சென்னை: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கோதுமை மற்றும் அரிசியுடன் தினையும் இனி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தயோதயா அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில், 21 கிலோ அரிசி, 9 கிலோ கோதுமை, 5 கிலோ தினை ஆகியவையும் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மாதம்தோறும் அரிசி, சீனி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிதியுதவியும் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே ரேஷன் கடைகளில் சிறு தானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த அரசாணையில், ' சென்னை, கோவை மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடம் இருந்து சிறு தானியங்களை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ராகி, கம்பு, திணை, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்கள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிடப்பட்டது.
நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், அரிசிக்கு பதிலாக அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன் படி கேழ்வரகு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில், கோதுமை மற்றும் அரிசியுடன் தினையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் ரேஷன் கார்டுதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநில ரேஷன் கார்டுதாரர்களுக்குத்தான் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு தானியங்கள் வழங்கும் அறிவிப்பை நிர்வாகம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் விநியோகம் தொடங்குகிறது.
அந்தயோதயா அட்டைதாரர்களுக்கு இதுவரை 21 கிலோ அரிசி மற்றும் 14 கிலோ கோதுமை வழங்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில், 21 கிலோ அரிசி, 9 கிலோ கோதுமை, 5 கிலோ தினை ஆகியவையும் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இது தவிர குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு யூனிட்டில் 2 கிலோ கோதுமை, 3 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி மாதம் முதல் ஒரு யூனிட்டில் 1 கிலோ கோதுமை, 1 கிலோ தினை, 3 கிலோ அரிசி வழங்கப்படும். பிப்ரவரி மாதம் முதல் தினை விநியோகத்தை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் இந்த பலனைப் பெறப் போகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications