அண்ணா பல்கலை விவகாரம்! ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரிக்கணும்!சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது வேறு பல வழக்குகள் உள்ளன. இதற்கிடையே இந்த 20 வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மாநிலம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியது.

அண்ணா பல்கலை. விவகாரம்:
சம்பந்தப்பட்ட அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை நடத்தினர். அதில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்தனர். ஞானசேகரன் அத்துமீறி அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
போலீசார் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில் ஞானசேகரன் மீது வேறு பல வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிரான 20 வழக்குகளை சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை கோரி மனு:
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன் தாஸ் என்பவர் இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளைத் தமிழக போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு இந்த வழக்குகளை மாற்றக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications