Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினி பற்றி பேசிய சர்ச்சை அடங்குவதற்குள் புதிய பஞ்சாயத்தை இழுத்த ஆதவ்! மாணிக்கம் தாகூர் கடும் கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக வாசலில் காங்கிரஸ் கட்சியினர் நிற்பதாக ஆதவ் அர்ஜுனா பேசியிருந்த நிலையில் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலடி கொடுப்போம்" என்றும், காங்கிரஸ் வரலாறு தெரியாதவர்கள் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடாமல் அமைதியாக இருக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆதவ் அர்ஜுனா இப்படி பேசியிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப் பதிவிற்கு ஒரு மாதம் கூட இல்லாத சூழலில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு பிரச்சாரம் என பம்பரமாக சுழல தொடங்கியுள்ளன.

Fresh Row Erupts as Adhav Arjuna Targets Congress Manickam Tagore Hits Back Amid Rajinikanth Controversy

தவெக வாசலில் நிற்பதாக பேச்சு

இந்த முறை தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து தேர்தலை சந்திக்கிறது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்க விஜய் பணிகளை செய்து வருகிறார். மேலும் பிரச்சாரத்தை தொடங்கவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார். பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இதனால் அங்கிருந்தே விஜய் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். வரும் 28 ஆம் தேதி விஜய் அங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். இதற்கிடையே ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் கொண்டு வர முயற்சித்த தவெகவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் நேற்று சென்னை எழும்பூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைய வாசலில் வந்து நிற்பதாக கூறியிருந்தார்.

பிடிக்காத பெண்ணை அழைத்து

2 நாட்களில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள். புதுவையில் இன்றைக்கு காங்கிரஸ் நடுத்தெருவில் நிற்கிறது. அங்கு நாராயணசாமியை போல தமிழ்நாட்டில் ப. சிதம்பரம் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஒட்டு மொத்த பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களும் தவெக வாசல் முன்பு நிற்கிறார்கள். திமுக குதிரை மீது ஏறி கொண்டு மாற்றம் வரக்கூடாது என நினைத்தோம். ராகுல் காந்தியும் விஜய் மீது தான் அன்பு வைத்துள்ளார்.

ஆனால் இங்குள்ள வயதானவர்கள் பெட்டி வாங்கிக் கொண்டு அடமானம் வைத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் புலம்புகிறார்கள். இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாக போகிறார்கள். பிடிக்காத ஒரு பெண்ணை அழைத்து ரூமில் அடைத்து கட்டாய கல்யாணம் செய்தது போலத்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி" என்று பேசியிருந்தார்.

கட்சியில் இருந்து நீக்கம்

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் செல்வம் அப்பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னை சந்தித்தாக ஆதவ் அர்ஜூனா பேசியிருந்த நிலையில் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணிக்கம் தாகூர் கண்டனம்

இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு காங்கிரஸ் நிர்வாகி மாணிக்கம் தாகூரும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலடி கொடுப்போம்.. பொறுப்பின்றி பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என நினைக்க கூடாது. பதிலடி உறுதியாக கொடுக்கப்படும். ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் வரலாறு தெரியாதவர்கள் ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடாமல் அமைதியாக இருக்க வேண்டும்" என்று பேசினார்.

அடுத்த சர்ச்சை

முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை திமுக மிரட்டியதாகவும் அதனால்தான் அவர் கட்சி ஆரம்பிப்பதை கைவிட்டதாக ஆதவ் அர்ஜுனா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என்றும் கண்டித்தார். இதையடுத்து தனது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஆதவ் அர்ஜுனா, காங்கிரஸ் தொடர்பாக பேசி விமர்சனத்தை சந்தித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+